வெள்ளி, 12 டிசம்பர், 2014

வடிவேலு ! சினிமாவில் இருக்கும் ஒரே ஒரு நல்லவர் இவர்தாய்ன்! ஒரு கிராமத்தையே தத்தெடுக்க விரும்புகிறார்.

‘‘என் மகனுக்கு, நான் ரகசியமாக திருமணம் நடத்தவில்லை. ஏழை வீட்டு பெண்ணை மருமகளாக எடுத்ததற்காக பெருமைப்படுகிறேன்’’ என்று நடிகர் வடிவேல் கூறினார்.
திருமணம் நடிகர் வடிவேலுவின் மகன் சுப்பிரமணியனுக்கும், திருப்புவனத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி புவனேஸ்வரிக்கும், மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் திருமணம் நடந்தது. இந்த திருமணத்துக்கு, நடிகர்–நடிகைகள், சினிமா உலக பிரமுகர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் யாரும் அழைக்கப்படவில்லை. நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும் அழைக்கப்பட்டிருந்தார்கள்.

மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்து, மண்டபத்துக்கு வெளியே பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. அவற்றிலும் வடிவேலுவின் பெயரோ, படமோ இடம்பெறவில்லை.
பேட்டி மகன் திருமணத்தை இவ்வளவு ரகசியமாக நடத்தியது ஏன்? என்ற கேள்விக்கு பதில் அளித்து, நடிகர் வடிவேல், ‘தினத்தந்தி’ நிருபரிடம் கூறியதாவது:–
சுப்பிரமணியன் எனக்கு மூத்த மகன். தலைமகன் என்பதால் தை மாதம் திருமணம் நடத்தக்கூடாது என்று சொன்னார்கள். மாசி மாதம் அவனுடைய பிறந்த மாதம் என்பதால், மாசியிலும் திருமணம் நடத்தமுடியாது. அதனால்தான் இந்த மாதத்தில் திருமணத்தை நடத்தினோம். இதில் ரகசியம் எதுவும் இல்லை.
குறுகிய காலத்தில் என் மகன் திருமணத்தை நடத்தியதால், சினிமா உலகைச் சேர்ந்தவர்கள் யாரையும் அழைக்கமுடியவில்லை. அப்படி அழைக்கவேண்டுமானால், குறைந்தபட்சம் 6 மாதகால அவகாசம் வேண்டும். அதனால்தான் சொந்தபந்தங்களை மட்டும் அழைத்து, திருமணத்தை நடத்தினேன். என் மகனையும், மருமகளையும், சொந்தபந்தங்கள் அனைவரும் மனதார வாழ்த்தினார்கள்.
ஏழை வீட்டு பெண் மருமகள் புவனேஸ்வரி, என் மனைவி விசாலாட்சி வழியில் உறவுப்பெண். ஏழை குடும்பத்தைச் சேர்ந்தவர். அவருடைய அப்பா ஒரு பந்தல் தொழிலாளி. நான் ஏழையாக பிறந்ததால், ஏழை வீட்டில் சம்பந்தம் செய்திருக்கிறேன்.
அன்னை மீனாட்சி அம்மன் அருளில், நான் பிறந்த மண்ணில்தான், என் மகள், மகன் இருவருக்கும் சம்பந்தம் செய்திருக்கிறேன். என்னை பெற்ற தாய் 80 வயதை தாண்டிவிட்டார். அவரால் நடக்கமுடியவில்லை. பேரன் திருமணத்தை பார்க்க ஆசைப்பட்டார். நடக்கமுடியாததால், திருமண மண்டபத்துக்குக்கூட அவரால் வரமுடியவில்லை. அதனால் திருமணம் முடிந்தபின், மகனையும், மருமகளையும் மணக்கோலத்தில் அழைத்துப்போய், என் அம்மாவிடம் ஆசிபெற செய்தேன்.
பேனர்கள் நான் ஒரு கிராமத்தை தத்து எடுக்க ஆசைப்பட்டேன். முடியவில்லை. இப்போது ஒரு ஏழை குடும்பத்தை தத்து எடுத்திருக்கிறேன். ஏழை வீட்டு பெண்ணை மருமகளாக ஆக்கிக்கொண்டதில் பெருமைப்படுகிறேன். நான் சினிமாவுக்கு வருவதற்கு முன்பு எப்படி இருந்தேனோ, அப்படியொரு வறுமைநிலையில் இருந்த குடும்பத்தில் சம்பந்தம் செய்துகொண்டதில் சந்தோஷம்.
திருமண மண்டபத்துக்கு முன்னால் வைக்கப்பட்டிருந்த பேனர்களில் என் பெயரும், படமும் இடம்பெறாததற்கு காரணம் இருக்கிறது. அப்படி வைத்திருந்தால், ரசிகர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தமுடியாது.
போலீசார் விசாரணை என் மருமகள் புவனேஸ்வரி திருமண வயதை அடையவில்லை என்று யாரோ செய்த புகாரின்பேரில், போலீசார் மண்டபத்துக்கு வந்து விசாரணை நடத்தினார்கள். புவனேஸ்வரிக்கு 19 வயது நிறைவடைந்து, 7 மாதங்கள் ஆகிறது.
இதை ஆதாரத்துடன் நிரூபித்ததும் போலீசார் வருத்தம் தெரிவித்தார்கள். என்னுடனும், மணமக்களுடனும் நின்று போட்டோ எடுத்துக்கொண்டார்கள்.
இவ்வாறு நடிகர் வடிவேல் கூறினார். dailythanthi.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக