செவ்வாய், 9 டிசம்பர், 2014

சுப்பிரமணியன் சுவாமி: பாஜக கூட்டணியிலிருந்து பாமகவும் விலக வேண்டும்:

பாஜக கூட்டணியிலிருந்து மதிமுக விலகியுள்ள நிலையில் பாமகவும் விலக வேண்டும் என சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
முன்னதாக, "கூட்டணியில் இருந்து கொண்டே பிரதமர் மோடியின் ஆட்சியை வைகோ விமர்சித்து வருகிறார் எனவே தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து மதிமுக விலக வேண்டும்" என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தி வந்தார். கருத்து மோதல்கள் வலுத்துவந்த நிலையில் மதிமுகவும் நேற்று பாஜக கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவித்தது. கூட்டணியிலிருந்து விலகுவதற்கான காரணங்களாக இலங்கையுடன் மத்திய அரசு கைகோத்து செயல்படுகிறது, இந்துத்துவா கொள்கைகளை திணிக்க முயற்சிக்கிறது என்ற குற்றச்சாட்டுகளை வைகோ முன்வைத்தார்.
இந்நிலையில், தற்போது பாமகவும் கூட்டணியில் இருந்து விலக வேண்டும் என அவர் கூறியுள்ளார். பாமக, விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி வரும் சுவாமி தனது ட்விட்டர் பக்கத்தில், "பாஜக கூட்டணியில் இருந்து பாமகவும் வெளியேற வேண்டும்" என கூறியுள்ளார். tamil.thehindu.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக