ஞாயிறு, 14 டிசம்பர், 2014

பின்லேடனை பற்றிய தகவல் கொடுத்தவருக்கு கொலை மிரட்டல்!

பாகிஸ்தான் அபோதாபாத்தில் மறைந்து வாழ்ந்த அல்கொய்தா தீவிரவாதிகள் தலைவர் பின்லேடன் கடந்த 2011–ம் ஆண்டு அமெரிக்க அதிரடிப்படையால் சுட்டுக் கொல்லப்பட்டார். அங்கு பதுங்கி இருந்த அவரை பாகிஸ்தானை சேர்ந்த டாக்டர் ஷகில் அப்ரிடி (50). அமெரிக்க உளவுத்துறையிடம் காட்டிக் கொடுத்தார். போலி நோய் தடுப்பு மருத்துவ நடவடிக்கை மூலம் அங்கு பதுங்கியிருப்பது பின்லேடன் தான் என்பதை உறுதி செய்தார். அதற்காக அவருக்கு பாகிஸ்தான் அரசு 35 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. அமெரிக்கா வற்புறுத்தலின் பேரில் அவரது தண்டனை காலம் 23 ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது. தற்போது அவர் பெஷாவரில் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.


இந்த நிலையில் அவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அதுகுறித்த கடிதம் கைபர் –பிக்துன்கவா மாகாண அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதில் மறைவாகவோ அல்லது வெளிப்படையாகவோ டாக்டர் ஷகில் அப்ரிடி கொல்லப்படுவார் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை கைபர் பக்துன்கவா மாகாண அதிகாரிகள், தெரிவித்துள்ளனர். அதை தொடர்ந்து டாக்டர் ஷிகில் அப்ரிடிக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக