வெள்ளி, 12 டிசம்பர், 2014

பாரதிக்கு ஓவர் அங்கீகாரம் ? கம்யுனிஸ்டுகளும் பாரதியும் பார்ப்பனீய பாதுகாவலர்கள்?

1403598_729218937156657_5482782967106153859_oஇது என்ன நியாயம்? ‘மகாகவிக்குக் கிடைக்க வேண்டிய தேசிய அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. கிடைக்கவில்லை’ என்ற தலைப்பில் இன்று (11-12-2014) புதியதலைமுறையில் நேர்படப்பேசு நிகழ்ச்சியில், விவாதம் நடைபெற இருக்கிறதாம். பாரதியாருக்கு கிடைத்திருக்கிற இந்த அங்கீகாரம் அவரின் தகுதிக்கும் திறமைக்கும் மீறிய கொண்டாட்டம்.
தமிழ் நாட்டிலேயே அவர் அளவிற்குக் கொண்டாடப்படுகிற கவிஞர்கள் அல்ல, தலைவர்களே கிடையாது.
இந்து அமைப்புகள், கம்யுனிஸ்டுகள், நவீனங்களிலிருந்து முற்போக்கு, பிற்போக்கு எல்லா வகையான இலக்கியவாதிகள், பெரியார்-அம்பேத்கர் பற்றிப் பேசுகிற கல்வியாளர்கள், அறிவுஜீவிகள், பேராசிரியர்கள், வைதிகப் பார்ப்பனர்கள், கருத்து சுதந்திரப் பார்ப்பனர்கள், ஆர்.எஸ்.எஸ் பார்ப்பனர்கள், புரட்சிகரப் பார்ப்பனர்கள், இயக்கங்கள், ஜாதி அமைப்புகள், தமிழ்த் தேசிய அமைப்புகள், தலித் அரசியல் பேசுகிறவர்கள், திராவிட இயக்க கண்ணோட்டம் கொண்டவர்கள், இஸ்லாமிய அறிவாளிகள் இப்படி எல்லாத் தரப்பினராலும் போற்றப்படுகிற ஒரே நபர் பாரதியார்.ஈழத்தமிழர்களை பற்றிய சிந்தனை கொஞ்சம்கூட இல்லாமல் சிங்களதீவு என்று பாடியவர்பாரதி வாழ்ந்த காலத்திலேயே வாழ்ந்து பாரதியின் புதுமை பெண் போன்ற பிரசார கவிதைகளுக்கு உதாரணமாகவே வாழ்ந்த டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியை பற்றி எந்த இடத்திலும் பாரதி குறிப்பிடாமைக்கு  அவரின் உள்ளத்தில் ஒழிந்திருந்த ஜாதி துவேஷம் தான்  
http://namathu.blogspot.com/2012/12/blog-post_7852.html

தமிழ் நாட்டில் எந்தத் தலைவர்களுக்கும் இல்லாத அங்கீகாரம் ஒரு கவிஞனுக்குக் கொடுத்திருக்கிறார்கள். அவரை இந்த அளவிற்குப் பொதுத்தளத்தில் நிறுத்துவதற்கு ஆரம்பகாலத்திலிருந்தே கம்யுனிஸ்டுகளிடம் நிலவிய, பெரியார் எதிர்ப்பு மனோபாவமே முக்கியப் பங்காற்றியிருக்கிறது.
ஆக, பாரதியைக் குறித்து இப்படியான தலைப்பில் ஓட்டுடெப்பு நடத்துவதும், விவாதிப்பதும் புதியதலைமுறையின் பச்சையான பார்ப்பனிய ஆதரவு கண்ணோட்டம் தான்.
இந்தத் தலைப்புப் பெரியாருக்கும் டாக்ர் அம்பேத்கருக்கும் தான் பொருந்தும்.
ஆனால், பெரியார் – டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள், நினைவுநாட்களில் அவர்களைப் பற்றி விவாதமே நடத்துவதில்லை. அப்படியே நடத்தினாலும்,
‘அம்பேத்கர் எழுதிய அரசியல் சட்டம் இன்றும் பொருந்துகிறதா? திருத்தலமா?’ – ‘பெரியார் கொள்கைகள் இன்றும் தேவைப்படுகிறதா? திராவிடம் இனி எடுபடுமா?’ என்பது போன்ற படு பச்சையான பார்ப்பனக் கண்ணோட்டம் கொண்ட தலைப்புகள் தான் தரப்படுகிறது.
பாரதியை இப்படித் தொடர்ந்து தூக்கிப் பிடிப்பது, மறைமுகமாகப் பார்ப்பனியத்திறகு சொம்பு தூக்குகிற ‘நவீன’ வேலை. mathimaran.wordpress.com  http://namathu.blogspot.com/2012/12/blog-post_7852.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக