ஞாயிறு, 28 டிசம்பர், 2014

கராச்சியில் வசிக்கும் தாவுத் இப்ராகிமை இந்தியாவிடம் ஒப்படையுங்கள்’ மத்திய அரசு வற்புறுத்தல்

மும்பை தொடர் குண்டு வெடிப்புக்கு காரணமான தாவூத் இப்ராகிம் கராச்சி நகரில் வசிப்பதற்கான புதிய ஆதாரம் வெளியாகி உள்ளது. இதைத்தொடர்ந்து, அவரை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு பாகிஸ்தானை மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது. புதுடெல்லி
1993–ம் ஆண்டு மார்ச் மாதம் 12–ந்தேதி மும்பை நகரில் அடுத்தடுத்து 13 குண்டு வெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்தன.
தாவூத் இப்ராகிம் இந்த குண்டுவெடிப்புகளில் 350 பேர் பலியானார்கள். 1,200–க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இந்த தாக்குதலுக்கு மும்பை நிழல் உலக தாதாவான தாவூத் இப்ராகிம் மூளையாக செயல்பட்டது விசாரணையில் தெரிய வந்தது. தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் தலைமறைவாக இருப்பதாகவும், அவரை பிடித்து தங்களிடம் ஒப்படைக்கும்படியும் இந்திய அரசு பலமுறை பாகிஸ்தானை கேட்டுக் கொண்டது. அதற்கான ஆதாரங்களையும் வழங்கியது.

ஆனால் பாகிஸ்தான் அதை பொருட்படுத்தவில்லை. தாவூத் இப்ராகிம் தங்கள் நாட்டில் இல்லை என்று பாகிஸ்தான் தொடர்ந்து மறுத்து வருகிறது. இன்டர்போல் என்னும் சர்வதேச போலீசும் மும்பை தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக தாவூத் இப்ராகிமை தேடி வருகிறது.
கராச்சியில் சொகுசு வாழ்க்கை இந்த நிலையில், 60 வயதான தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானின் கராச்சி நகரில் வசிப்பதாகவும், அங்கு அவர் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவதாகவும் ‘நியூஸ்மொபைல்.இன்’ என்ற வலைத்தளம் தகவல் வெளியிட்டு இருக்கிறது.
தாவூத் இப்ராகிம் தனது கூட்டாளியான யாசிர் என்பவருடன் பேசியதை ரகசியமாக பதிவு செய்ததாக கூறி அந்த இணையதளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது.
ரியல் எஸ்டேட் தொழில் அதன்படி, தாவூத் இப்ராகிம் கராச்சி நகரில் வசித்துக் கொண்டே பாகிஸ்தானிலும், வளைகுடா நாடுகளிலும் ரியல் எஸ்டேட் தொழில் செய்வது தெரிய வந்துள்ளது.
தாவூத் இப்ராகிமின் கூட்டாளியான யாசிர் பாகிஸ்தானில் செல்வாக்கு மிகுந்த ஒருவரின் மகன் ஆவார். அவர் தாவூத் இப்ராகிமின் நிதி ஆலோசகராகவும் செயல்பட்டு வருகிறார். இவர்தான் ரியல் எஸ்டேட் தொழிலில் தீவிரம் காட்டி வருகிறார்.
இதில் கிடைக்கும் வருமானம் தாவூத் இப்ராகிம் மூலம் சர்வதேச அளவில் தீவிரவாத குழுக்களுக்கு வழங்கப்படுவதாகவும் அந்த இணையதளம் தகவல் வெளியிட்டு இருக்கிறது.
இது குறித்து அந்த வலைத்தளத்தின் தலைமை ஆசிரியர் சவுரப் சுக்லா நிருபர்களிடம் கூறுகையில், ‘‘தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் வசிப்பதற்கு மறுக்க முடியாத ஆதாரமாக இது இந்தியாவுக்கு கிடைத்து உள்ளது. எனவே இது தொடர்பாக பாகிஸ்தானுக்கு இந்தியா அழுத்தம் கொடுத்து சட்டத்தின் முன்பாக தாவூத் இப்ராகிமை கொண்டு வந்து நீதியை நிலைநிறுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்’’ என்று குறிப்பிட்டார்.
ராஜ்நாத் சிங் தாவூத் இப்ராகிம் கராச்சி நகரில் வசிப்பதாக வெளியாகி இருக்கும் தகவல் குறித்து, நேற்று லக்னோ நகரில் உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கிடம் நிருபர்கள் கருத்து கேட்டனர்.
அப்போது அவர் கூறுகையில், ‘‘தாவூத் இப்ராகிம் இந்தியாவால் தேடப்படும் தீவிரவாதி, அவரை ஒப்படைக்குமாறு பாகிஸ்தானை இந்தியா பலமுறை கேட்டுக் கொண்டு உள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம்’’ என்றார்.
பின்னர் அங்கு அவர் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், தாவூத் இப்ராகிம் பற்றிய அனைத்து விவரங்களும் மத்திய அரசிடம் இருப்பதாகவும், அவரது நடவடிக்கைகள் கண்காணிக்கப்படுவதாகவும், இந்த பிரச்சினையில் மத்திய அரசு விரைவில் முடிவு எடுக்கும் என்றும் கூறினார்.
ஒப்படைக்க வேண்டும் உள்துறை ராஜாங்க மந்திரி கிரண் ரிஜிஜு கூறுகையில், தாவூத் இப்ராகிம் கராச்சியில்தான் வசிக்கிறார் என்பதில் இந்தியா ஏற்கனவே உறுதியாக இருப்பதாகவும், இது தொடர்பான ஆதாரங்களை கொடுத்து இருப்பதால், அவரை பாகிஸ்தான் ஒப்படைக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
தீவிரவாதத்தை ஒழிப்பதில் பாகிஸ்தான் அக்கறை காட்டுவது உண்மையானால், இந்த விஷயத்தில் இந்தியாவுடன் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.dailythanthi.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக