ஞாயிறு, 7 டிசம்பர், 2014

அங்காடித் தெருதான் ஈடுசெய்தது! வில்லு, சர்வம், ஏகன் படங்களின் நஷ்டத்தை.......



மிஷ்கின்  :“தமிழ் சினிமா எங்கே போய்க்கொண்டிருக்கிறது என்று எனக்கு தெரியும். நல்ல சினிமா படங்கள் வெளிவர முடியாத சூழ்நிலை உள்ளது. நான் இயக்கிய ‘சித்திரம் பேசுதடி’ படமும், ‘அஞ்சாதே’ படமும் மிக கீழ்த்தரமான படங்கள். மூன்றாம் தரமானவை…”
-அடடா… எப்பேற்பட்ட நேர்மை இவருக்கு! இந்த மூன்றாம்தர, கீழ்த்தரமான படங்களை, அவை கீழ்த்தரமானவை என்று தெரிந்தே எடுத்தது ஏனோ… மாய்ந்து மாய்ந்து அவற்றின் சிறப்புக்களை பத்திரிகையாளர்களிடம் சொல்லித் திரிந்தது ஏன்? -நந்தலாலா  வெளியாகாமல் போக இன்றைய சூழல்; காரணமில்லை. அய்ங்கரனின் சில தவறான முடிவுகளே காரணம். இதைக்கூட நாம் சொல்லவில்லை. தயாரிப்பாளர் அருண்பாண்டியன் சொன்னது. ‘வில்லு, சர்வம், ஏகன் போன்ற படங்களை, ஹீரோக்களின் கால்ஷீட் கிடைத்ததே என்று கதையைக் கூட யோசிக்காமல் எடுத்ததன் விளைவு, பெரிய நஷ்டத்தைச் சந்தித்தோம்’ என்று அங்காடித் தெரு பிரஸ் ஷோவில் சொன்னார் அருண்பாண்டியன்.
இந்தப் படங்களின் நஷ்டத்தை அவர்களுக்கு அங்காடித் தெருதான் ஈடுசெய்தது என்பதை மறக்கக் கூடாது.-வினோ envazhi.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக