வியாழன், 18 டிசம்பர், 2014

அரவிந்தர் ஆசிரமம் ஹேமலதா : தற்கொலைக்கு முயன்றபோது 4 பேர் என்னை கற்பழித்தனர்

எங்கு செல்வதென்று தெரியாமல் அனைவரும் காலாப்பட்டு கடற்கரைக்கு சென்றோம். அப்போது 4 பேர் கொண்ட கும்பல் என்னை வலுக்கட்டாயமாக கற்பழித்தது.
புதுவை அரவிந்தர் ஆசிரமத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட 5 சகோதரிகளும் தாய், தந்தை ஆகியோரும் காலாப்பட்டு பகுதிக்கு சென்றனர். அங்கு 7 பேரும் கைகோர்த்தபடி கடலுக்குள் இறங்கினார்கள்.மீனவர்கள் நீந்தி சென்று 4 பேரை மீட்டனர். 3 பேரை அலை இழுத்து சென்று விட்டது. அவர்கள் 3 பேரும் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர். சிறிது நேரத்தில் அவர்களுடைய உடல் கரையில் ஒதுங்கியது.கடலில் மூழ்கி இறந்தவர்கள் தாயார் சாந்திதேவி, சகோதரிகள் அருணாஸ்ரீ, ராஜஸ்ரீ என்று தெரியவந்தது. இதுபற்றி தகவல் அறிந்து கோட்டக்குப்பம் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். மீட்கப்பட்ட தந்தை பிரசாத், நிவேதிதா, ஜெயஸ்ரீ, ஹேமலதா ஆகியோர் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். தங்கள் சொத்துக்களை ஆச்ரமதிடம் கொடுத்துவிட்டு ஆன்மீகத்தை தேடி தொண்டு செய்தவர்களுக்கு அரவிந்தர் ஆஸ்ரமம் செய்த கைம்மாறு கற்பழிப்பு கொலை! ஆஸ்ரமத்தின் ஏஜெண்டுகள் போல செயல்பட்ட காவல்துறை அந்த பெண்களுக்கு உரிய அடைக்கலம் ஏற்பாடு செய்து கொடுக்காமல் ஆஸ்ரமத்துக்கு நல்ல பிள்ளையாக .... ? ஏன் ? லஞ்சம் ?
இந்நிலையில், கடலில் குதித்து தற்கொலைக்கு முயன்று உயிர் பிழைத்த இளைய சகோதரி ஹேமலதா செய்தியாளர்களிடம் பேசுகையில்,  ’’கடந்த 14 வருடமாக நாங்கள் அரவிந்தர் ஆசிரம குடியிருப்பில் வசித்து வந்தோம். இதற்கிடையே எங்களுக்கு பல்வேறு பாலியல் தொந்தரவுகள் வந்தன. இதனால் நாங்கள் ஆசிரம நிர்வாகத்தை எதிர்த்து போராட்டமும் நடத்தினோம். மேலும் ஆசிரமத்தில் நடந்த பல சம்பவங்கள் தொடர்பாக போலீசில் புகார் மனுவும் அளித்தோம். ஆனால் அந்த புகார் மனு மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை.இதற்கிடையே ஆசிரம நிர்வாகம் எங்களை ஆசிரம குடியிருப்பில் இருந்து வெளியேற்ற நேற்று நடவடிக்கை எடுத்தது. நாங்கள் வெளியேற மறுத்து போராட்டம் நடத்தினோம். போலீசார் எங்களை அழைத்து சென்று பேச்சுவார்த்தை நடத்தியதின் அடிப்படையில் விடுதி சாவியை போலீசாரிடம் ஒப்படைத்து விட்டு நாங்கள் 5 பேரும் எங்கள் பெற்றோர் வசித்த வீட்டுக்கு சென்றோம்.அங்கிருந்து எங்கு செல்வதென்று தெரியாமல் அனைவரும் காலாப்பட்டு கடற்கரைக்கு சென்றோம். அப்போது 4 பேர் கொண்ட கும்பல் என்னை வலுக்கட்டாயமாக கற்பழித்தது. இதனை நிரூபிக்க நான் டி.என்.ஏ. சோதனைக்கு உட்படுத்த தயாராக உள்ளேன்’’என்று கூறினார்.  nakkheeran.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக