புதன், 5 நவம்பர், 2014

கொல்கொத்தா துறைமுகத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் திட்டம் அம்பலம்! Sub marraines நிறுத்தப்பட்டுள்ளது,

மேற்குவங்காள மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஹால்டியா துறைமுகத்தில் இந்த வாரம் பாகிஸ்தான் கப்பல் படையின் உதவி பெறும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், பாதுகாப்பை பலப்படுத்தும்படியும் மத்திய அரசு எச்சரிக்கை விடுத்தது. இந்த தகவல் துறைமுக பாதுகாப்பை கவனித்துவரும் மத்திய தொழில் பாதுகாப்பு படைக்கு அனுப்பப்பட்டது. இதைத் தொடர்ந்து மத்திய தொழில்பாதுகாப்பு படை, போலீசார், துறைமுக நிர்வாகத்தினர் கலந்து ஆலோசித்து 24 மணி நேரமும் துறைமுகம் மற்றும் சுற்றுவட்டார பகுதிக்கு பலத்த பாதுகாப்பு போட்டுள்ளனர்.
துறைமுகம் தவிர தலைமை செயலகம், சட்டமன்றம், ஐகோர்ட்டு உள்பட நகரில் பல முக்கிய பகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. துறைமுகத்தில் 2 போர்க்கப்பல்கள் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்தது. தீவிரவாதிகள் அச்சுறுத்தலால் அந்த 2 கப்பல்களும் கொண்டு செல்லப்பட்டது maalaimalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக