திங்கள், 10 நவம்பர், 2014

சென்னை ஆர்.எஸ்.எஸ் பேரணியை எதிர்த்து ஆர்ப்பாட்டம்! தமிழிசை, இல.கணேசன் RSS பேரணி 25000 பேர் கைது!

rss-bjp-aarpatam-small
சென்னை, மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய நகரங்களில் தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் பேரணி: தமிழிசை, இல.கணேசன் உட்பட 25000 பேர் கைது
இந்த பார்ப்பன மதவெறி அமைப்புக்கள் அவை பார்ப்பன – ஆதிக்க சாதி மக்களுக்காக அவர்களின் கொடுங்கோன்மையை நடைமுறைப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டவையே.சென்ற இடமெல்லாம் உழைக்கும் மக்களை பிளவு படுத்தி சாதி மதவெறிக் கலவரங்களை திட்டமிட்டு உருவாக்கிவரும் ஆர்.எஸ்.எஸ் நச்சுப்பாம்பு தமிழகத்தில் 6 மாவட்டங்களில் நவம்பர்9-ல் பேரணியும் பொதுக்கூட்டங்களையும் நடத்த திட்டமிட்டது.
பெரியாரையும் அம்பேத்கரையும் வைத்து பிழைப்பு நடத்தும் யாரும் மூச்சு விடவில்லை. டிரோஜன் குதிரையை நம்பாதீர்கள் என்று வீரமணி அறிக்கைவிடுகிறார்.எனினும் 94 வயதிலும் தன் மூத்திரச்சட்டியை தூக்கிக் கொண்டு தமிழ் மக்களுக்கு சூடு சொரணையை ஏற்படுத்தக் காலமெல்லாம் அடிகளையும் உதைகளையும் வாங்கி திரிந்த பகுத்தறிவுச் சூரியன் தந்தை பெரியாருக்கு அந்தக்கவலை எப்போதும் இருந்ததில்லை பார்ப்பன எதிர்ப்பில்.

பாபர் மசூதி இடிக்கப்பட்டது முதல் இந்துமதவெறி பாசிசத்துக்கு எதிராக உழைக்கும் மக்கள் அனைவரும் அணிதிரண்டு களத்திலிறங்கி போராடிக் கொண்டிருக்கின்றன, மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்புக்கள்.

இப்போது ‘சமுதாய நல்லிணக்கம்’, ‘ராஜேந்திர சோழனுக்கு விழா’ என்று முகமூடி போட்டு வரும் ஆ.எஸ்.எஸ்-ன் பொய்முகத்தை கிழிக்கும் வகையில் புரட்சிகர அமைப்புக்களின் தலைமையில் 09.11.14 அன்று காலை வடபழனி சந்தை அருகில் காலை 11 மணிக்கு எழுச்சி மிகு ஆர்ப்பாட்டம் பாசிச இருளைக்கிழிக்கும் முழக்கங்களோடு தொடங்கியது.
அனுமதியோம்! அனுமதியோம்!
காவி உடை பயங்கரவாதிகள்
ஆர்.எஸ்.எஸ்-ன் பேரணியை
தமிழகத்தில் அனுமதியோம்!
கார்ப்பரேட் முதலாளிகளின் அடியாளான
தொழிலாளிகளின் எதிரியான
தீண்டாமையை கொடுமையைப் புகுத்தி
தலித் மக்களை இழிவுபடுத்திய
பார்ப்பன……பாசிஸ்டுகளின்
பேரணியை முறியடிப்போம்!
இட்லரின் வாரிசுகளின்
ஆர்.எஸ்.எஸ்-பிஜேபி
வி.எச்.பி-இந்து முன்னணி
பார்ப்பன பயங்கரவாதிகளை
தமிழகத்தில் காலூன்றவிடாமல்
விரட்டியடிப்போம்! விரட்டியடிப்போம்!
இது பெரியார் பிறந்த மண் என்ற
வெற்றுப் பேச்சு பயனில்லை!
ஆர்.எஸ்.எஸ் நச்சுப்பாம்பு
படையெடுத்து வருகிறது!
குஜராத்தில், முசராபாத்தில்
இந்துமதவெறி ஆட்டம் போட்டு
முசுலீம் மக்களை கொன்று குவித்த
மோடி – அமித்ஷா பாசிச கும்பல்
தமிழகத்தில் நுழைகிறது!
பெரியாரின் வாரிசுகளே……!
இனியும் தாமதிப்பது அறிவீனம்
களமிறங்குவோம்! களமிறங்குவோம்!
ஆர்.எஸ்.எஸ் வகையாறாக்களை
தமிழகத்தில் இருந்து துடைத்தெறிவோம்!
உழைக்கும் மக்களே!
ஜனநாயக சக்திகளே!
ஓரணியாய் எழுந்து நிற்போம்!
பார்ப்பன பாசிசக் கும்பலுக்கு எதிரான
அரசியல் எழுச்சிக்கு அணிதிரள்வோம்!
ஆர்.எஸ்.எஸ்-பிஜேபி
பார்ப்பன பாசிசக் கும்பலுக்கு
தமிழகத்தில் கல்லறை எழுப்புவோம்!
ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்த மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநிலப் பொருளாளர் தோழர். வெங்கடேசன் “முசுலீம் மக்களையும் தாழ்த்தப்பட்ட உழைக்கும் மக்களையும் கொல்வதையே கொள்கையாக வைத்துள்ள ஆர்.எஸ்.எஸ் இப்போது இப்போது கலாச்சார அமைப்பு என்ற பெயரில் வந்திருக்கிறது. மயானம், கோயில் குடிநீர் அனைத்தும் அனைவருக்கும் சொந்தம் என்றும் சமுதாய நல்லிணக்கம் வேண்டும் என்றும் சுவரொட்டி ஒட்டுகிறார்கள். ஆனால் உழைக்கும் மக்களை வருணாசிரம அடிப்படையில் பிரித்து அவர்களை தன் பார்ப்பன சாதிவெறிக்கு பலியிடுவது யார் ? உழைக்கும் மக்களை பிளவுபடுத்தி சமுதாயத்தை துண்டாடுவது யார்? ஆர்.எஸ்.எஸ் தான்.
இப்படிப்பட்ட இந்த நச்சுப்பாம்பு தேச விடுதலைப்போரில் வெள்ளைக்காரனுக்கு அடியாள் வேலை பார்த்தது. அன்று முதல் இன்று வரை பல்வேறு கலவரங்கள் மூலம் தாழ்த்தப்பட்ட மற்றும் உழைக்கும் மக்களை கொன்றொழித்து இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு அமைப்பு இன்று பேரணி நடத்த ஜனநாயக உரிமை வேண்டும் என்கிறதென்றால் தமிழகத்தில் நாம் என்ன செய்ய வேண்டும்?
பார்ப்பன எதிர்ப்பினை கற்றுக்கொடுத்த தந்தை பெரியார் பிறந்த மண்ணில் இதை நாம் அனுமதிக்க முடியாது. இந்த ஆர்.எஸ்.எஸ்ன் கீழ் 46 நச்சுப்பாம்புகள் நாடுமுழுக்க பரவிக்கிடக்கிறது. இந்த பார்ப்பன மதவெறி அமைப்புக்கள் உழைக்கும் மக்களுக்கானவை அல்ல, அவை பார்ப்பன – ஆதிக்க சாதி மக்களுக்காக அவர்களின் கொடுங்கோன்மையை நடைமுறைப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டவையே என்பதை நாம் உணர்ந்து உழைக்கும் மக்களை அணிதிரட்டி பார்ப்பன இந்து மதவெறி பாசிசத்தை மோதி வீழ்த்தவேண்டும் ” என்று அறைகூவினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பிரசுரத்தை வாங்கிய பலர் நம்மிடம் சந்தேகங்களைக் கேட்டுச் சென்றனர். ஆர்.எஸ்.எஸ் பேரணி என்றவுடன் கொந்தளித்து பார்ப்பன எதிர்ப்பு தடையரணாக இருந்து இருக்க வேண்டிய தமிழகம் இப்போது அமைதியாக இருக்கிறது. இதோ அந்த அமைதியை உடைக்க ஆரம்பித்து விட்டோம், பெரியார் என்ற அந்த பார்ப்பன எதிர்ப்புச் சூரியனை கையிலேந்தி தமிழகத்தின் பார்ப்பன எதிர்ப்பு மரபின் வழியில் பார்ப்பன பாசிஸ்டுகளை சுட்டெரிப்போம் அந்த நம்பிக்கையை இந்த ஆர்ப்பாட்டம் ஏற்படுத்தியிருக்கிறது என்றால் அது மிகையல்ல. vinavu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக