செவ்வாய், 18 நவம்பர், 2014

சென்னை ஒப்பந்தகாரருக்கு அபராதம் விதித்த நேர்மையான அதிகாரி இடமாற்றம் !விஜய் பிங்ளே IAS Transferred Days after fining contractors

Officials said on condition of anonymity that the powerful contractor lobby was responsible for the decision to move Pingale out of the corporation. "The timing of his transfer, only days after he penalised contractors responsible for poorly laid roads, is no coincidence," an official said.
The corporation, under Pingale, had on Wednesday made public the names of nine contractors who it said would have to reimburse the civic body 2 crore for repairs it carried out on stretches laid by them. Pingale had promised to name other contractors for poor work and said the total penalties were likely to rise.சென்னையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக பல இடங்களிலும் சாலைகள் குண்டும் குழியுமாக மாறி உள்ளன. இதில் பேட்ச் அப்  வேலைகள் செய்ய தவறிய ஒப்பந்ததாரர்கள் சிலருக்கு மாநகராட்சி அபராதம் விதித்தது. இந்நிலையில் அபராதம் விதிக்கப்பட்ட 3 நாட்களில் மாநகராட்சி உயர்  அதிகாரிக்கு டிரான்ஸ்பர் ஆணை பிறப்பிக்கப்பட்டிருப்பது ஐஏஎஸ் அதிகாரிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாநகராட்சியில் இணை ஆணையராக  இருந்த டாக்டர் விஜய் பிங்ளே திடீரென கடந்த சனிக்கிழமை தொழில்துறை இணை செயலாளராக இட மாற்றம் செய்யப்பட்டார். விஜய் பிங்ளே ஒரு எம்பிபிஎஸ் டாக்டர். கடந்த 2004ம் ஆண்டு ஐஏஎஸ் பயிற்சி முடித்தவர். கடந்த 16 மாதங்களாக மாநகராட்சியில் இவர் பல்வேறு பணிகளையும்  மிகவும் சிரத்தையாக செய்து வந்தார். சாலை பணிகளின் தர நிர்ணய குழுவில் மிக முக்கியமான அதிகாரியான இவர்நேர்மையாகவும், திறமையாகவும்  செயல்படுபவர்.ஊருக்கு ஒரு சகாயமும்  ட்ராபிக் ராமசாமியும் தேவை 
மாநகராட்சி பணத்தை வாங்கிக் கொண்டு, ஒப்புக்கு சாலைகள் அமைத்த ஒப்பந்ததாரர்களுக்கு அவர் அபராதம் விதித்தார். இதுதான் அவரது  மாறுதலுக்கு முக்கிய காரணமாக விளங்கியுள்ளது.

இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகள் தரப்பில் கூறும் போது, விஜய் பிங்ளே இட மாற்றத்திற்கு ஆளும் கட்சி ஒப்பந்ததாரர்களின் செல்வாக்குதான் காரணம்.  கான்டிராக்டர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்ட ஓரிரு நாட்களில் விஜய்பிங்ளேவுக்கு டிரான்ஸ்பர் அளிக்கப்பட்டிருப்பது தற்செயலானதல்ல என்கின்றனர்.முறையாக  பணிகளை செய்யாத ஒப்பந்ததாரர்கள் மாநகராட்சியால் அளிக்கப்பட்ட ரூ.2 கோடியை திரும்ப செலுத்த வேண்டும் என்றும், இல்லையென்றால் அபராத தொகை  விதிக்கப்படும் என்றும் கடந்த புதன்கிழமை விஜய் பிங்ளே எச்சரிக்கை விடுத்திருந்தார். முறையாக பணிகளை செய்யாத 9 ஒப்பந்ததாரர் பெயரையும் பகிரங்கமாக  வெளியிட்டார். இது ஒப்பந்ததாரர்கள் மத்தியில் கிலியை ஏற்படுத்தியது.இதுகுறித்து மாநகராட்சி பொறியாளர் ஒருவர் கூறுகையில், ஒப்பந்ததாரர்களுக்கு அபராதம்  விதிப்பேன் என விஜய் பிங்ளே கூறியது அவர் மீதுஆத்திரத்தை கிளப்பிவிட்டுள்ளது என்றார்.

விஜய் பிங்ளேவை பொறுத்த வரையில் மிகவும் நேர்மையாகவும் சரியாகவும் நடந்து கொள்ள வேண்டும் என்றும் விரும்பியுள்ளார். இதனால் எந்த அரசியல்  அழுத்தத்திற்கும் சமரசம் செய்து கொள்ள அவர் தயாராக இல்லை. இந்த நிலையில் கடந்த வாரம் அமைச்சர் வேலுமணி தலைமையில் மழைக்கால பணிகள் குறித்த  ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் முன்னிலையிலேயே விஜய் பிங்ளேவுக்கு எதிராக ஒப்பந்ததாரர்கள் தங்களது புகார் அம்புகளை வீசத் தொடங்கினர்.  அப்போதே விஜய் பிங்ளே வெளியேற வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டிருக்கலாம் என்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.இதுகுறித்து மற்றொரு அதிகாரி  கூறுகையில், மழைக்காலத்தில் நகரத்தில் தேங்கும் மழைநீரை வெளியேற்றுவதில் விஜய் பிங்ளே மிகவும் நிபுணத்துவம் வாய்ந்தவராக உள்ளார். அவரது நடவடிக்கை  காரணமாக கடந்த 2 ஆண்டுகளில் மாநகராட்சி பணிகள் நல்ல மேம்பாடு அடைந்திருந்தது என்றுதான் சொல்ல வேண்டும் என்றார்.

தமிழக அரசின் டிரான்ஸ்பர் முடிவு சக அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மாநகராட்சியில் பல முக்கியமான பணிகள் பாதிக்கப்படும்  அபாயம் உள்ளது. குறிப்பாக தி. நகரில் அவர் மேற்கொண்ட நடைபாதை பணிகள், பொது கழிப்பறைகள் கட்டும் பணி, போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக  உருவாக்கப்படும் சைக்கிள் டிராக் உள்ளிட்ட பல முக்கியத்துவம் வாய்ந்த பணிகள் இதனால் பாதிக்கப்பட உள்ளன.மாநகராட்சியை பொறுத்தவரை எந்த பணி  நடந்தாலும் அந்த பகுதியில் உள்ள கவுன்சிலர்களுக்கு ஒவ்வொரு திட்டத்திலும் சுமார் 10 சதவீதம் வரை கமிஷன் கொடுக்க வேண்டியுள்ளதால், தரமான  பொருட்களை வாங்க முடியாத நிலை இருக்கிறது என அதிகாரிகள் கூறுகின்றனர்.

மேலும் பணிகளை ஆய்வு செய்ய தரக்கட்டுப்பாடு குழு ஒன்றை விஜய் பிங்ளே நியமித்தார்.  பணி மோசமாக நடைபெற்றது என்று தரக்கட்டுப்பாடு குழு அறிக்கை  கொடுத்தால் லஞ்சம் வாங்கும் அதிகாரிகளுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சும். லஞ்சம் வாங்கி பயன் அடைந்த அதிகாரிகள் சிலருக்கு இது எரிச்சலை ஏற்படுத்தியது.  அவர்களும் விஜய்பிங்ளேவுக்கு எதிராக செயல்பட்டதாக கூறப்படுகிறது.விஜய் பிங்ளே நேர்மையான அதிகாரியாக இருந்த போதிலும் எப்படி காய்களை நகர்த்த  வேண்டும் என்பதை அறியாதவர். இதனால் தற்போது ஒப்பந்ததாரர்களின் மீது கை வைத்து அது டிரான்ஸ்பர் வரை கொண்டு சென்றுள்ளது.மாநகராட்சி ஆணையர்  விக்ரம் கபூருக்கு அடுத்த இடத்தில் இருந்தவர் விஜய் பிங்ளே. தற்போது அவரது டிரான்ஸ்பர் நேர்மையான அதிகாரிகள் மத்தியில் கலக்கத்தை  ஏற்படுத்தியுள்ளது.தற்போது விஜய் பிங்ளேவுக்கு பதிலாக நில நிர்வாக இணை ஆணையராக இருந்த கே.எஸ்.கந்தசாமி அந்த இடத்தில் நியமிக்கப்பட்டுள்ளா. மேலும்  திருப்பத்தூர் துணை கலெக்டராக இருந்த ஷில்பா பிரபாகர் சதீஷ் தற்போது துணை கமிஷனராக மாநகராட்சியின் கல்வித்துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். - tamilmurasu.org

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக