செவ்வாய், 4 நவம்பர், 2014

EVKS: சோதனை காலங்களில் ஜி.கே.வாசன் வெளியேறுவது சந்தர்ப்பவாதம்!

காங்கிரஸ் கட்சியிலும், ஆட்சியிலும் பதவிகளை அனுபவித்து சோதனையான காலகட்டத்தில் கட்சியில் இருந்து வெளியேறுவது சந்தர்ப்பவாதம் என ஜி.கே. வாசன் மீது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் குற்றம்சாட்டினார். புதிய கட்சி தொடங்கப் போவதாக வாசன் அறிவித்துள்ளதைத் தொடர்ந்து கட்சி அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் முக்கிய நிர்வாகிகளுடன் செவ்வாய்க்கிழமை அவர் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: காங்கிரஸ் கட்சியிலிருந்து விலக வேண்டாம் என வாசனிடம் நேரில் வேண்டுகோள் விடுத்தேன். ஆனாலும் அவர் புதிய கட்சி தொடங்கப் போவதாக அறிவித்துவிட்டார். காங்கிரஸ் கட்சியிலும், ஆட்சியிலும் பதவிகளை அனுபவித்துவிட்டு சோதனையான காலகட்டத்தில் கட்சியிலிருந்து வெளியேறுவது சந்தர்ப்பவாதம்.இவ்வளவு காலமும் உருப்படியாக இவர் என்னபன்னினார் அல்லது என்ன பேசினார் டோடல் வேஸ்ட் . அரசியலில்  நைசாக சகல இலாபங்களையும் எல்லா இன்பங்களையும்  பெற்ற வெகு சிலரில் இவரும் ஒருவர் ! நோகாமல் நொங்கு எடுத்தது போதும். இனியாவது  அரசியலில் இருந்தே ஒதுங்கி இருப்பது மக்களுக்கு செய்யும் சேவை , ம்ம்ம் அதைதானே இப்ப தொடங்கி இருக்காக?
விரல்விட்டு எண்ணக்கூடியவர்களே புதிய கட்சிக்குச் சென்றுள்ளனர். எனவே, அவர்களால் காங்கிரஸில் எந்த வெற்றிடமும் ஏற்படவில்லை.  தமிழக காங்கிரஸில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் 400 பேர் உள்ளனர். அவர்களில் 380 பேர் காங்கிரஸிலேயே தொடர்கின்றனர். லட்சக்கணக்கான தொண்டர்கள் சோனியா, ராகுல் காந்தியின் தலைமையை ஏற்று செயல்படத் தயாராக இருக்கும்போது வெளியேறிவர்களைப் பற்றி கவலைபடத் தேவையில்லை.
2016 சட்டப்பேரவைத் தேர்தலில் காமராஜர் ஆட்சி அமைப்போம். முடியவில்லை என்றால் காங்கிரஸ் இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது என்ற நிலையை ஏற்படுத்துவோம். காங்கிரஸ் ஒரு மூழ்கும் கப்பல் என பாஜக தேசியச் செயலாளர் எச். ராஜா கூறியிருப்பதற்கு நான் பதிலளிக்க விரும்பவில்லை. அவர் எனது நண்பர். பாஜகவில் இருப்பதால் அவர் அப்படித்தான் பேசியாக வேண்டும் என்றார் இளங்கோவன்.tamil.webdunia.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக