திங்கள், 17 நவம்பர், 2014

மத்தியில் மீண்டும் புதிய கூட்டணி உருவாகிறது? காங்கிரஸ் காய் நகர்த்துகிறது!

புதுடில்லி : லோக்சபா தேர்தலில் ஏற்பட்ட படுதோல்வியை அடுத்து, ஐ.மு., கூட்டணியில் புதிய கட்சிகளை சேர்க்க காங்., மேலிடம் திட்டமிட்டுள்ளது. முதல் கட்டமாக, இன்று துவங்கும் நேரு தொடர்பான சர்வதேச மாநாட்டில் பங்கேற்க, தே.ஜ., கூட்டணியில் அங்கம் வகிக்காத கட்சிகளுக்கு, காங்., மேலிடம் அழைப்பு விடுத்துள்ளது.நாட்டின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின், 125வது பிறந்த நாளையொட்டி, காங்., கட்சி சார்பில், இன்றும், நாளையும், டில்லியில் சர்வதேச மாநாடு நடத்தப்படுகிறது.இந்த மாநாட்டில், நேருவின் சிந்தனைகள், கொள்கைகள் குறித்த கருத்தரங்கங்களும் நடக்கவுள்ளன. 'ஜனநாயகமும், மக்களுக்கான அதிகாரமும். நேருவின் உலகளாவிய சிந்தனை' ஆகிய தலைப்புகளின் கீழ், விவாதங்களும் நடக்கவுள்ளன இந்த சர்வதேச மாநாட்டை, தங்களின் அரசியல் எழுச்சிக்கு அடித்தளமாக பயன்படுத்த காங்., மேலிடம் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணியில் அங்கம் வகிக்காத அரசியல் கட்சிகளுக்கு, இந்த மாநாட்டில் பங்கேற்க, காங்., மேலிடம் அழைப்பு விடுத்துள்ளது.   சரியான திட்டமிருப்பின் நிச்சயம் காங்கிரஸ் மீண்டும் அரசியலில் ஜொலிக்க ஆரம்பித்துவிடும். ஏனென்றால் பா ஜ கவின் குளறுபடிகள்..நிச்சயம் காங்கிரசுக்கு சாதகமாகவே இருக்கும். நான்காண்டுகளில் பா ஜ க மேலும் மோசமாகவே ஆட்சியை செய்யும். அதற்குள் காங்கிரஸ் தனது பிரச்சாரம் மூலம் தனது பலத்தை அதிகரிக்க செய்திடலாம். காங்கிரசின் எழுச்சி பா ஜ கவின் வீணான திட்டங்களே என்பதிலே மாற்று கருத்தே இருக்க முடியாது. சுயவிளம்பர திட்டங்கள்..மக்களுக்கான திட்டங்களே காணோமே..வெறுத்துபோயுள்ள மக்களின் கவனம் காங்கிரசை நோக்கி திசை திருப்ப பா ஜ க அணைத்து வேலைகளையும் நன்றாக செய்துவருகின்றது...
மம்தாவின் திரிணமுல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், இடதுசாரி கட்சிகள் ஆகியவற்றின் தலைவர்களுக்கு, இந்த மாநாட்டில் பங்கேற்கும்படி காங்., மேலிடம் அழைப்பு விடுத்துள்ளது.

பொதுவான எதிரி:

இந்த கட்சிகளின் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்கும் பட்சத்தில், ஐ.மு., கூட்டணியில் இணையும்படி, அவர்களுக்கு பகிரங்கமாக அழைப்பு விடுக்கவும், காங்., தலைவர்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 'பா.ஜ., பொதுவான எதிரி' என்ற ஒருமித்த கருத்தை உருவாக்கி, அதன் அடிப்படையில் இந்த கட்சிகளுக்கு வலை விரிக்க காங்., மேலிடம் முடிவு செய்துள்ளது. இதையடுத்து, இந்த சர்வதேச மாநாடு, அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திஉள்ளது.dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக