வியாழன், 27 நவம்பர், 2014

கேரளாவில் தமிழக வியாபாரிகள் விரட்டியடிப்பு

கம்பம்,நவ.27 (டி.என்.எஸ்) முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்தவிடாமல் பல்வேறு இடையூறுகளை செய்து வரும் கேரள அரசு, தற்போது கேரளாவில் உள்ள சிறு வியாபாரிகளை வியாபாராம் செய்ய விடாமல் துரத்தி அடித்துள்ளது.முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியை நெருங்கிய போது கேரளாவை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அடியாட்கள் அத்துமீறி தடை செய்யப்பட்ட அணை பகுதிக்குள் நுழைந்தனர்.அவர்களை தடுத்து நிறுத்த முயன்ற தமிழக அதிகாரிகளையும் தாக்கினர். ஆனால் தடையை தாண்டி அணையின் நீர்மட்டம் 142 அடி வரை உயர்த்தப்பட்டது. இதனால் தமிழக அதிகாரிகள் மீது கேரள போலீசார் மற்றும் அதிகாரிகள் கோபத்தில் உள்ளனர்.


இந்த நிலையில், சபரிமலை ஐயப்பன் கோவில் சீசனை முன்னிட்டு, பம்பை, எரிமேலு ஆகிய பகுதிகளில், கேரள அரசின் விதிமுறைப்படி வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள சிறுவியாபாரிகள் நூற்றக்கணக்கானோரை கேரள போலீசார் வியாபாரம் செய்யவிடாமல் துரத்தி அடிக்கின்றனர்.

அதிலும் எந்த வருடமும் இல்லாத அளவில் இந்த வருடம் கேரள போலீசார் தமிழக வியாபாரிகளிடம் கடுமையாக நடந்து கொள்வதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழக வியாபாரிகளின் பொருட்களை பறித்து கொண்டு விரட்டி வருவதாக புகார் தெரிவித்துள்ளனர். இதனால் பல வியாபாரிகள் சீசன் தொடங்கிய சில நாட்களிலேயே வியாபாரம் செய்ய முடியாமல் தங்கள் ஊருக்கு திரும்பி வருகின்றனர்.tamil.chennaionline.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக