புதன், 19 நவம்பர், 2014

சுயநலம், பண வெறி, காமவெறி பிடித்த சாமியார்கள்! மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தை உடனே கொண்டு வருக!


பெங்களூரு நவ.18_ சுயநல வெறி, பண வெறி, காமவெறிகளாலும், மூடத்தனத்தாலும் இந்து மத சாமியார்களே இந்து மதத்திற்குக் கேடு செய்து வருகின்றனர். எனவே விரைவாக மூடநம்பிக்கை ஒழிப்பு சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என்று இந்து சமய சாமி யார்களே அரசுக்குக் கோரிக்கை வைத்து அதனை வலியுறுத்தி பட்டினிப் போராட்டமும்  இருந்தனர்.
கர்நாடகத்தில் மூடநம் பிக்கை ஒழிப்புச் சட்டத்தை உடனடியாக நிறைவேற்றக் கோரி 300-க்கும் மேற் பட்ட இந்து மத சாமி யார்கள் பெங்களூருவில் பட்டினிப் போராட் டத்தில் ஈடுபட்டுள்ளனர். கருநாடகத்தில் மூடநம் பிக்கை ஒழிப்பு சட்டத்தை அமல்படுத்த போவதாக அம்மாநில அரசு கடந்த ஆண்டு சட்டப்பேரவை யில் அறிவித்தது. இதனைக் கண்டித்து பாஜக, ஆர்எஸ்எஸ், விஷ்வ இந்து பரிஷத், சிவசேனா, ராம சேனா உள்ளிட்ட இந்துத்துவா அமைப்புகள் போராட்டத்தில் குதித்தன. எனவே, அந்த சட்டத்தை கருநாடக அரசு கிடப்பில் போட்டது.

13 கோரிக்கை
இந்நிலையில் கருநாடக மாநிலத்தை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட இந்து மத சாமியார்கள் மூடநம் பிக்கை ஒழிப்பு சட்டம், பெண்கள் பாதுகாப்புச் சட்டம் உள்ளிட்ட 13 கோரிக்கைகளை நிறை வேற்றக்கோரி பெங்களூரு வில் திங்கள்கிழமை பட் டினிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த போராட்டத்தைத் தொடங்கி வைத்து நீடி மாமுடி சென்னமலா மடாதிபதி வீரபத்ரா சுவாமி பேசியதாவது:
நம் நாட்டில் நடக்கும் சரிபாதி குற்றச்செயல் களுக்கு ஏதோ ஒரு வகை யில் மதம் காரணமாக இருக்கிறது. எதற்காக மதங் கள் ஏற்படுத்தப்பட்ட னவோ, அந்த அறநெறி யில் இருந்து விலகி மத குருமார்கள் பயணித்து கொண்டிருக்கின்றனர். இதுவே மதத்தின் பெய ரால் நடக்கும் அத்தனைப் பாவங்களுக்கும் முக்கிய காரணம்.
மதத்தின் பெயரால் நடக்கின்ற மூடநம்பிக்கை கள், மிருகத்தனமான சடங்குகள் அப்பாவிகளை யும் ஏழைகளையும் குறிப் பாக தாழ்த்தப்பட்டவர் களையும் அதிக அளவில் வதைக்கின்றன. கோயில்களில் நடைபெறும் மூடநம்பிக்கை சடங்குகள் அரசியலமைப்பு சட்டத் துக்கு முற்றிலும் எதி ரானவை.
சமீபகாலமாக கருநா டகத்தில் மதத்தின் பெய ரால் நடைபெறும் மூட நம்பிக்கைகள் அதிகரித்து வருகின்றன. மடங்களில் தொடரும் குற்றங்களால் மக்கள் இந்து மதத்தின் மீது கொண்டிருந்த நம் பிக்கையை இழந்து வரு கின்றனர். இழந்த நம்பிக் கையை மீட்டெடுக்க மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தை உடனடியாக நிறைவேற்றுவது அவசியம்.
மூடநம்பிக்கை விஷம்
மூடநம்பிக்கை தொடர்ந்து பேணப் படு வதற்கு சாமியார்களி டையே நிலவும் சுயநலமும் பண வெறியும் காம உணர்வும்தான் காரணம். தங்களது திட்டத்தை நிறைவேற்றிக்கொள்ள பக்தர்கள் மீது மூடநம் பிக்கை விஷத்தை ஊற்று கின்றனர். பல இடங்களில் குற்றவாளிகள் சாமியார் களாக உலவிக் கொண்டி ருக்கிறார்கள்.
எளிமையும், தூய்மையும், நேர்மையும் இருக்க வேண் டிய மடங்கள் இன்று ஆடம்பரக் கூடமாக இருக் கின்றன. கோடிக்கணக்கில் பணத்தை வாங்கிக் கொண்டு, ஆன்மிகத்தை போதிக்கின்றனர். இத்தகைய கார்ப்பரேட் சாமியார்கள்தான் மூட நம்பிக்கை அழியாமல் இருப்பதற்கு முக்கிய கார ணம். மேலும் மூடநம் பிக்கையை வெவ்வேறு வடிவங்களில் மக்களிடம் வளர்த்துக் கொண்டிருப்ப தும் அவர்கள்தான். எனவே கருநாடகத்தில் உட னடியாக மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்த 3 நாள் பட்டினிப் போராட்டத்துக்கு பல்வேறு தலித் அமைப் புகளும் முற்போக்கு இயக் கங்களும், கன்னட எழுத் தாளர் மரளுசித்தப்பா உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட எழுத்தாளர் களும் ஆதரவு தெரிவித் துள்ளனர்.
viduthalai.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக