புதன், 5 நவம்பர், 2014

நடிகர் கார்த்திக் காங்கிரசில் இணைந்தார்! பின்பு வழக்கம்போல குழம்பினார் ? இன்னும் இணையவில்லை ஆனால் ஆதரவு என்றார்! முடியல?

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் கட்சியின் பலத்தை அதிகரிக்கும் முயற்சியில்  இறங்கி உள்ளார். இந்த நிலையில், சத்திய மூர்த்தி பவனுக்கு இன்று பல்வேறு கட்சிகளைச்  சேர்ந்தவர்கள் வந்து, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் முன்னிலையில் காங்கிரசில் சேர்ந்தனர். என்.ஜி.ஓ. சங்க முன்னாள் தலைவர் சூரியமூர்த்தி, நாடாளுமன்ற தேர்தலில் சிதம்பரம்  தொகுதியில் பாமக சார்பில் போட்டியிட்ட மணிரத்தினம் ஆகியோர் தலைமையில் 100க்கும்  மேற்பட்டவர்கள் காங்கிரசில் இணைந்தனர். கட்சியில் இணைந்தவர்களை வரவேற்று இளங்கோவன் பேசியதாவது: காங்கிரஸ் கட்சி தோல்வியை சந்தித்துள்ள இந்த சூழ்நிலையில், நீங்கள் காங்கிரசில்  இணைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
உங்களை பாராட்டி வரவேற்கிறேன். காங்கிரஸ்  ஆட்சியின் போது பதவி சுகம் அனுபவித்த சிலர் இன்று, சோதனையான கால கட்டத்தில்  பிரிந்து சென்று விட்டனர். இந்த சூழ்நிலையில் நீங்கள் சேர்ந்திருப்பது ஆறுதல் அளிக்கிறது.  உங்களை மனதார வரவேற்கிறேன்.
சோனியாகாந்திக்கு வெற்றி தோல்வி முக்கிய மல்ல. நமது நாடுதான் முக்கியம். மதவெறி  நாடாக இல்லாமல் மதசார்பற்ற நாடாக இருப்பதற்கு அவரது கரத்தை வலுப்படுத்த வேண்டும்.  இமயம் முதல் குமரி வரை ஒரே தாயின் பிள்ளையாக இருந்தால் தான் காங்கிரசை  வலுப்படுத்த முடியும். சிலர் இந்த கட்சியில் இருந்து விலகியது பலர் கட்சிக்குள் வருவதற்கு  வசதியாக அமைத்துவிட்டது. காங்கிரஸ் என்கிற வீட்டை சீர் செய்து பலப்படுத்தினால் தான்  நாட்டை காப்பாற்ற முடியும் என்று அவர் பேசினார். 
நடிகர் கார்த்திக் தலைமையிலான நாடாளும் மக்கள் கட்சியும் காங்கிரசுடன் இணைகிறது.  இதற்காக நடிகர் கார்த்திக் இன்று தனது ஆதரவாளர்களுடன் சத்தியமூர்த்தி பவனுக்கு வந்தார்.  அவரை ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வரவேற்றார். இவரும் கட்சி இணைப்பு குறித்து பேசிக்  கொண்டிருந்தனர். நிகழ்ச்சியின் போது கோபண்ணா, சிரஞ்சீவி, ரங்கபாஷ்யம் உள்பட பலர்  உடன் இருந்தனர்.  tamil.webdunia.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக