ஞாயிறு, 16 நவம்பர், 2014

தேஜாஸ்ரீ கொலை! அக்காவை பழி வாங்க தங்கையை கொன்றேன்:கைதான வாலிபர் திடுக் வாக்குமூலம்

சேலம்: சேலம் அருகே உள்ள வன்னியர் நகரை சேர்ந்தவர் துரைராஜ் (42). தனியார் கிரானைட் கம்பெனி ஊழியர். இவரது மனைவி கஸ்து£ரி (38). இவர்களது மகள்கள் ஹரிணி(20), தேஜாஸ்ரீ (14). இதில் தேஜாஸ்ரீ, தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் கடந்த 13ம் தேதி மாலை வீட்டில் தனியாக இருந்த தேஜாஸ்ரீ, கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க 11 இன்ஸ்பெக்டர்கள் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் கொலையுண்ட தேஜாஸ்ரீயின் அக்கா ஹரிணியை ஈரோடு மாவட்டம் கவுந்தபாடியை சேர்ந்த யுகாதித்தியன் (28) என்பவர் காதலித்தது தெரிய வந்தது. யுகாதித்தியனை பிடித்து விசாரித்தனர். அவர் தேஜாஸ்ரீயை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். கொலைக்கு உடந்தையாக இருந்த அவரது நண்பர் சசியையும் போலீசார் கைது செய்தனர். யுகாதித்தியன் போலீசிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளார்.


யுகாதித்தியன் பொறியியல் கல்லூரியில் பி.இ. ஏரோநாட்டிக்கல் படிக்கும் போது தேஜாஸ்ரீயின் அக்கா ஹரிணியை காதலித்துள்ளார். இது தொடர்பாக ஹரிணி, தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். உடனே ஹரிணியின் பெற்றோர், கல்லூரிக்கு சென்று யுகாதித்தியனை மிரட்டி உள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த யுகாதித்தியன், எப்படியாவது ஹரிணியை அடைந்தே தீர வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஹரிணி சென்னையில் உள்ள தனியார் கம்பெனிக்கு வேலைக்கு சென்றார். அதன்பின் ஹரிணியை தேடி யுகாதித்தியன் பலமுறை சென்னை சென்று பேசியுள்ளார். ஆனால் காதலுக்கு ஹரிணி உடன்படவில்லை. பழி வாங்கும் எண்ணத்தில் ஹரிணி அல்லது அவரது குடும்பத்தில்  ஒருவரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.

சம்பவத்தன்று ஹரிணியின் வீட்டுக்கு யுகாதித்யன் தனது நண்பர் சசி குமாருடன் சென்றார். அங்கு தேஜாஸ்ரீ மட்டும் இருந்துள்ளார். அவரிடம் அக்கா ஹரிணியின் செல்போன் நம்பரை கேட்டுள்ளார். அவர் கொடுக்க மறுத்ததால், தேஜாஸ்ரீயின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளனர். பின்னர் அப்பகுதியினர் அடையாளம் காணாமல் இருப்பதற்காக ஹெல்மெட் மற்றும் குரங்கு குல்லா அணிந்து கொண்டு தப்பி உள்ளனர். இவ்வாறு யுகாதித்தியன் வாக்குமூலம் அளித்து இருப்பதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.dinakaran.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக