ஞாயிறு, 16 நவம்பர், 2014

முத்தமா ? நிர்வாணமா? கலாசார காவலர்களே / மதவாதிகளே கண்ணாடியில் உங்களை பாருங்கள்?

கல்லுாரி மாணவர்களிடையே, முத்த போராட்டம், பரவாமல்
தடுக்க, தமிழகம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். கேரள மாநிலம், கோழிக்கோட்டில் உள்ள, தேநீர் விடுதியில், மாணவ, மாணவியர், ஒருவரை ஒருவர் கட்டியணைத்து, முத்தம் கொடுத்தனர். இதற்கு, சில அமைப்புகள், எதிர்ப்பு தெரிவித்தன.அந்த எதிர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், நேற்று முன்தினம், சென்னை ஐ.ஐ.டி.,யில், மாணவ, மாணவியர், முத்த போராட்டம் நடத்தினர். இதையடுத்து, மற்ற கல்வி நிறுவனங்களை சேர்ந்த மாணவர்கள் மத்தியில் முத்த போராட்டம் பரவாமல் தடுக்க, போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். அதற்காக, தனி போலீஸ் படையும் அமைக்கப்பட்டுள்ளதாக, கூறப்படுகிறது.
'பொது இடங்களில், முத்தமிடுவது தவறு இல்லை. உச்சநீதிமன்றமே அனுமதி அளித்துள்ளது' என, மாணவர்கள் வாதிடுகின்றனர். ஆனால், இந்திய தண்டனை சட்டம், 294(ஏ) பிரிவின்படி, மற்றவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தும் வகையில், பொது இடங்களில் செய்யப்படும், எந்தவித ஆபாச செயலும், குற்றமே.இதற்கிடையே, இந்து மக்கள் கட்சியின், குமாரவேலு தலைமையில், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், நேற்று, அளிக்கப்பட்ட புகார் மனுவில், சென்னை ஐ.ஐ.டி.,யில், முத்த போராட்டத்தில் ஈடுபட்ட, மாணவர்களை கைது செய்யும்படி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

- நமது நிருபர் - தினமலர்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக