சனி, 1 நவம்பர், 2014

யுவன் சங்கர் ராஜா திருமணம் மணமகள் கீழக்கரையை சேர்ந்த ஜபருன்னிஸா!

சென்னை: யுவன் சங்கர் ராஜா 3வது திருமணம்
செய்கிறார்.இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா கடந்த 2005ம் ஆண்டு லண்டனை சேர்ந்த பாடகி சுஜாவை மணந்தார். ஒன்றிரண்டு வருடத்திலேயே இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டது. இருவரும் விவாகரத்து பெற்றனர். பிறகு ஷில்பா மோகன் என்பவரை மணந்தார். அவருடனும் பிரச்னை ஏற்பட்டு பிரிந்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் யுவன் இஸ்லாம் மதத்துக்கு மாறினார். தினமும் 5 வேளை தொழுவதாக அவர் தெரிவித்தார். இந்நிலையில் யுவனுக்கும் ராமநாதபுரம் கீழக்கரையை சேர்ந்த ஜபருன்னிஸாவுக்கும் நட்பு ஏற்பட்டது. இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். நேற்று முன் தினம் இருவருக்கும் ரகசியமாக நிச்சயதார்த்தம் நடந்தது. நேற்று யுவன் தாயாரின் நினைவு தினம். இதற்காக குடும்பத்தினர் சொந்த ஊருக்கு சென்று சாமிகும்பிட்டனர். அங்கிருந்த யுவன் சகோதரர் கார்த்திக் ராஜாவிடம் இதுபற்றி தொலைபேசியில் கேட்டபோது,‘யுவனின் நிச்சயதார்த்தம் பற்றி உறுதியாக தெரியவில்லை. ஆனால் அவருக்கு நிச்சயதார்த்தம் நடந்ததாக எனக்கும் தகவல் வந்தது என்றார்.யுவன், ஜபருன்னிஸா திருமணம் வரும் டிசம்பர் மாதம் துபாயில் நடக்க உள்ளது.

.tamilmurasu.org

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக