ஞாயிறு, 16 நவம்பர், 2014

ராஜ்நாத் சிங் : இந்தியை கொண்டாட வேண்டிய நேரம் வந்துவிட்டது!

நாட்டில் 75 சதவீதத்தினர் இந்தி மொழியை அறிந்திருக்கும்போது, அதனை நாம் ஆட்சி உபயோகத்திற்கு பயன்படுத்தாமல் இருக்கிறோம் என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.
டெல்லியில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான நிகழ்ச்சியில் பங்கேற்ற உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இது குறித்து பேசும்போது, "நாடு சுதந்திரம் அடைந்து 67 ஆண்டுகள் ஆன போதிலும் நமது அலுவலக மொழியாக இந்தி உபயோகபடுத்தப்படவில்லை. நமது நாட்டில் இருக்கும் மக்களுள் 75 சதவீதத்தினர் இந்தி தெரிந்தவர்களாகவோ அல்லது இந்தி பேசக் கூடியவர்களாகவோ இருக்கின்றனர்.
நமது முன்னோடிகளான பால கங்காதர் திலக், சுபாஷ் சந்திர போஸ், ராஜக்கோபாலச்சாரி ஆகியோர் இந்தி அறியாமலே, இந்த மொழியை பரப்பினர். ஆனால் இந்தி நமது ஆட்சி மொழியாக இல்லை. தற்போது இந்தியை கொண்டாட வேண்டிய தருணம் வந்துவிட்டது. இந்த நிலை தொடர்ந்தால் நமது இந்தி மற்றும் பல மொழிகள் அழிவை நோக்கி சென்றுவிடும். அத்தகைய நிலையை நம்மால் ஏற்க முடியாது.
21-வது நூற்றாண்டில் இந்திய மற்றும் ஆசிய மொழிகள் மிகவும் அவசியமானது என்பதை நாம் உணர வேண்டும். நம் மொழியை பரப்ப அனைத்து வகையிலான முயற்சிகளை எடுக்க வேண்டும்" என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக