செவ்வாய், 4 நவம்பர், 2014

பால் விலையை கண்டித்து திமுக தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்

சென்னை: பால்விலை, பேருந்து கட்டணம், மின் கட்டணம் உயர்ந்துள்ளதைக் கண்டித்து திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதேபோல, மாநிலம் முழுவதும் இன்று காலையில் கொட்டும் மழையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.தமிழகத்தில் பால் விலை லிட்டருக்கு ரூ.10 உயர்த்தப்பட்டது. அதேபோலபால் கோவா, நெய் போன்ற பால் பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்தது. மின் கட்டணத்தையும் கடுமையாக உயர்த்த ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல, கனமழைக்கு மாநிலம் முழுவதும் சேதம் ஏற்பட்டது. ஆனால் நிவாரண நடவடிக்கைகளை மாநில அரசு முறையாக செய்யவில்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதனால் விலை உயர்வைக் கண்டித்தும், மாநில அரசின் செயல்படாத செயலைக் கண்டித்தும் மாநிலம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.


தென் சென்னை மாவட்ட திமுக சார்பில் சேப்பாக்கம் அரசினர் விருந்தினர் மாளிகை அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் ஜே.அன்பழகன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதி கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்துப் பேசினார். கூட்டத்தில், அமைப்பு செயலாளர்கள் டி.கே.எஸ். இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி, தலைமை நிலைய செயலாளர் சதாசிவம், முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன், முன்னாள் அமைச்சர் ரகுமான்கான், முன்னாள் எம்.பி. வசந்தி ஸ்டான்லி, தொழிலாளர் அணி செயலாளர் ரத்தினசபாபதி, மு.க.தமிழரசு, கு.க.செல்வம், பகுதி செயலாளர்கள் மதன் மோகன், தனசேகரன், அ.வேலு, அன்புதுரை, ராமலிங்கம், மகேஷ்குமார், காமராஜ், மாணவரணி நிர்வாகிகள் சீனிவாசன், ஷியாம், ரகமத்துல்லா, சுரேஷ், தொமுச செயலாளர் பி.டி.சி.பாலு, வணிகர் சங்க தலைவர் வி.பி.மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கலெக்டர் அலுவலகம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு திமுக வடசென்னை மாவட்ட பொறுப்பாளர் ஆர்.பி.சேகர் தலைமை தாங்கினார். பொருளாளர்  மு.க.ஸ்டாலின் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்துப் பேசினார். துணைப் பொதுச்செயலாளர் சற்குணபாண்டியன், முன்னாள் எம்.பி. திருச்சி சிவா, பி.கே.சேகர் பாபு, கிரிராஜன், செங்கை சிவம், சங்கரி நாராயணன், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். காஞ்சிபுரத்தில் தா.மோ.அன்பரசன், திருவள்ளூரில் சுதர்சனம், திருச்சியில் மாவட்ட செயலாளர் கே.என்.நேரு, மதுரை மாநகரில் தளபதி, புறநகரில் மூர்த்தி, நெல்லையில் கருப்பசாமி பாண்டியன், விருநகரில் கே.கே.எஸ்.எஸ்.ஆர்., ராமநாதபுரத்தில் சுப.தங்கவேலன், தூத்துக்குடியில் பெரியசாமி, கன்னியாகுமரியில் சுரேஷ்ராஜன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதே போன்று மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில், மாநில அரசுக்கு எதிராக தொண்டர்கள் கோஷங்களை எழுப்பினர்.மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன், பகுதி செயலாளர்கள் மகேஷ்குமார், மதன்மோகன், காமராஜ், தனசேகரன், மயிலை வேலு, மு.ரவி, அன்புதுரை, ஏழுமலை, கருணாநிதி, பாண்டிபஜார் பாபாசுரேஷ், வக்கீல் அணி கே.ஜெ.சரவணன், இளைஞரணி அமைப்பாளர்கள் சிற்றரசு, துணை அமைப்பாளர் ஏ.எம்.வி.பிரபாகரராஜா, பி.மாரி, சேப்பாக்கம் சிதம்பரம், பெருங்குடி எஸ்.வி.ரவிச்சந்திரன், ஓ.எம்.ஆர். ஏகாம்பரம் உட்பட பலர் கலந்து கொண்டனர்./tamilmurasu.org

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக