திங்கள், 3 நவம்பர், 2014

ஜெயந்தி நடராஜனிடம் சி பி ஐ விசாரணை? விதிகளை மீறி சுரங்க அனுமதி வழங்கிய விவகாரம்!

புதுடில்லி : சுரங்க நிறுவனங்களுக்கு, விதிமுறைகளை மீறி அனுமதிஅளித்தது தொடர்பான வழக்கில், மத்திய சுற்றுச்சூழல் துறை முன்னாள் அமைச்சரும், காங்., மூத்த தலைவருமான ஜெயந்தி நடராஜனிடம் விசாரணை நடத்த, சி.பி.ஐ., திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.யானைகள் சரணாலயம்:சி.பி.ஐ., வட்டாரங்கள் கூறியதாக, பி.டி.ஐ., நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி:
முந்தைய காங்., ஆட்சி காலத்தில், ஜார்க்கண்ட் மாநிலம், மேற்கு சிங்பும் மாவட்டத்தில், சரந்தா வனப் பகுதியில் உள்ள,512 ஹெக்டேர் நிலம், ஜிண்டால் ஸ்டீல் மற்றும் பவர் லிட்., நிறுவனத்துக்கு, இரும்பு தாது தொடர்பான சுரங்க தொழிலுக்காக வழங்கப்பட்டது.யானைகள் சரணாலயமாக திகழ்ந்த இந்த வனப் பகுதி, விதிமுறைகளை மீறி, சுரங்க தொழிலுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டதாக புகார் எழுந்தது.  இவிங்க வெள்ளையா இருக்கறதால பொய்யோ பேசவோ ஊழலோ செஞ்சி இருக்கமாட்டாங்க ..
அதற்கு முன்னதாக, வனத்துறை அதிகாரிகள் சார்பில், மத்திய அரசிடம் ஒரு அறிக்கை அளிக்கப்பட்டது. அதில், 'யானைகள் சரணாலயம் அமைந்துள்ள இந்த வனப் பகுதியை, சுரங்கத் தொழிலுக்கு ஒதுக்குவது பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும். இந்த பகுதியில், 107 வகையான மரங்கள் உள்ளன. எனவே, இங்கு சுரங்கத் தொழில் அமைந்தால், யானைகளுக்கு பாதிப்பு ஏற்படுவதுடன், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படும்' என, கூறப்பட்டது. சமூக மற்றும் சுற்றுச் சூழல் ஆர்வலர்களும் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.இதன் அடிப்படையில், இந்த நிலத்தை சுரங்க நிறுவனத்துக்கு வழங்குவதற்கு அனுமதி அளிப்பதில் சுற்றுச்சூழல் அமைச்சகம் தாமதித்து வந்தது.ஆனாலும், 2013ல், கடும் எதிர்ப்பையும் மீறி, அனுமதி வழங்கப்பட்டது. மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும், வனத் துறை ஆலோசனை குழு, இது தொடர்பான எதிர்ப்புகளை அலட்சியப்படுத்தியது.


முதல் தகவல் அறிக்கை:


சர்ச்சை எழுந்ததை தொடர்ந்து, சி.பி.ஐ., ஏற்கனவே முதல் கட்ட விசாரணையை துவங்கியுள்ளது. விதிமுறைகளை மீறியதற்காக விரைவில், ஜிண்டால் சுரங்க நிறுவனம் மற்றும் சம்பந்தபட்ட நிலத்தை, அந்த நிறுவனத்துக்கு வழங்குவதற்கு, அனுமதி அளித்த சுற்றுச் சூழல் அமைச்சக அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு எதிராக, முதல் தகவல் அறிக்கையான, எப்.ஐ.ஆர்., பதிவு செய்ய சி.பி.ஐ., திட்டமிட்டுள்ளது.நிலம் ஒதுக்கப்பட்ட காலத்தில் சுற்றுச்சூழல் துறையின் அமைச்சராக இருந்தவரும், தமிழகத்தை சேர்ந்தவருமான ஜெயந்தி நடராஜனிடமும், இதுகுறித்து விசாரணை நடத்த சி.பி.ஐ., திட்டமிட்டுள்ளது.இவ்வாறு, அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.


'ஜெயந்தி வரி':


நரேந்திர மோடி, பா.ஜ., பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும், கடந்தாண்டு பல்வேறு பொது கூட்டங்களில் பேசினார். அப்போது, அவர் பேசியதாவது:சுற்றுச்சூழல் துறையில் ஏராளமான கோப்புகள் தேங்கி கிடப்பதாக கூறப்படுகிறது. பணம் இல்லாமல் எந்த கோப்பும் நகருவது இல்லையாம். வருமான வரி, விற்பனை வரி, சுங்க வரி பற்றி நாம் கேள்விப்பட்டுள்ளோம். ஆனால், டில்லியில் ஜெயந்தி வரி என ஒன்று இருப்பதை இப்போது தான் அறிகிறோம். இந்த வரி இல்லாமல், சுற்றுச்சூழல் துறையில் எந்த வேலையும் நடக்காது. இது, மிகவும் அதிர்ச்சிகரமான விஷயம்.இவ்வாறு, அவர் பேசினார்.dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக