வெள்ளி, 7 நவம்பர், 2014

அப்புச்சி கிராமம்! பகைகள் எல்லாம் உறவாகிறது.கஞ்சன் எல்லாம் வள்ளல் ஆகிறார்கள் . பூக்காத காதல்கள் பூத்து குலுங்குகிறது. .

சென்னை: கோலிவுட்டில் புதியதாக வர இருக்கும் "அப்புச்சி கிராமம்" திரைப்படத்தினை ஏ.ஆர் முருகாதசிடம் உதவியாளராக இருந்த வி.ஐ.ஆனந்த் இயக்கியுள்ளார். இப்படத்தில் புதுமுகங்கள் பிரவீன் குமார், அனுஷா கதாநாயகன், கதாநாயகியாக நடித்துள்ளனர். இவர்களுடன் சுவாசிகா, சுஜா, கஞ்சா கருப்பு, சிங்கம்புலி, ஜோமல்லூரி, ஜி.எம்.குமார் ஆகிய பிரபல நடிகரகளும் நடித்துள்ளனர். இப்படம் விரைவில் வெளியாகும் எனத்தெரிகின்றது. அறிவியல் வழியில் அன்பைச் சொல்லும் “அப்புச்சி கிராமம்” திரைப்படம்! பூமியை நோக்கி வரும் எரிகற்கள்: படத்தின் கதையின் படி, "சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் பூமியை நோக்கி ஆயிரக்கணக்கான எரிகற்கள் வந்து கொண்டிருப்பதை கண்டுபிடிக்கிறார்கள். எட்டு நாட்களில் பூமியின் அழிவு: இன்னும் 8 நாட்களில் அது பூமியை தாக்கும். அது தாக்குகிற இடத்தில் புல் பூண்டுகள் கூட தப்பிக்காது. 8 நாளில் கிட்டத்தட்ட உலகின் பெரும் பகுதி அழிந்து விடும். ஆனால் எந்தெந்த பகுதி அழியும், எது தப்பிக்கும் என்று தெரியாது. அப்புச்சி கிராம மனிதர்கள்: இந்த செய்தி உலகம் முழுவதும் பரவுகிறது. அப்புச்சி என்னும் கிராமத்துக்கும் செய்தி வந்து சேர்கிறது. பல்வேறு தரப்பட்ட வெள்ளிந்தியான மக்கள் வாழும் கிராமம் அப்புச்சி கிராமம். மனநிலையின் கோர்வைகள்: 8 நாளில் நாம் சாகப்போகிறோம் என்று கருதும் அந்த மக்களின் மனநிலையில் என்ன மாற்றம் நிகழ்கிறது என்பதுதான் கதை.
8 நாட்களில் அவர்கள் தங்களை மாற்றிக் கொள்கிறார்கள். மாற்றங்கள் நிகழும்: கடனை கேட்டு நச்சரித்தவன் வேண்டாம்னே அப்புறம் பார்த்துக்கலாம் என்பான். காதலை மறுத்துக் கொண்டிருந்தவள் காதலிக்க ஆரம்பிக்கிறாள். கஞ்சனாக இருந்தவன் வள்ளலாக மாறுகிறான். அன்பு பூத்துக் குலுங்கும் கிராமம்: இப்படி பல மாற்றங்கள் அவர்களுக்குள் நடக்கிறது. உலகம் அழியும் ஒரு நாளைக்கு முன்பே ஊரே கூடி திருவிழா கொண்டாடுகிறார்கள். ஒருவரை ஒருவர் நேசிக்கிறார்கள். பகைகள் உறவாக மாறுகிறது. அடக்கி வைத்திருக்கும் அன்பு உடைத்து கிளம்புகிறது. பூக்காத காதல்கள் பூத்து குலுங்குகிறது. உண்மையான வாழ்க்கை: மறுநாள் அவர்கள் எதிர்பார்த்த மாதிரி உலகம் அழியவில்லை, கடந்த 8 நாட்கள் வாழ்ந்த அந்த அற்புதமான வாழ்க்கைதான் உண்மையான வாழ்க்கை என்தை உணர்ந்து அது போலவே தொடர்ந்து வாழ முடிவு செய்கிறார்கள். வித்தியாச அனுபவம்: இது ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை நிச்சயம் கொடுக்கும்" என்கிறார் ஆனந்த்.
Read more at: http://tamil.filmibeat.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக