செவ்வாய், 4 நவம்பர், 2014

Shift Work / சுழற்சி முறையில் வேலை உங்களை முட்டாள் ஆக்கலாம் !நீரழிவு இரத்த அழுத்தம்....!

பிரான்சில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், சுழற்சி முறையில் பணிபுரியும் நபர்களின் ஞாபக சக்தி மற்றும் மூளை திறன் மங்குவதாக தெரியவந்துள்ளது. பிரான்சில் 3000 பேர் பங்கேற்ற இந்த ஆய்வின் முடிவில், சுழற்சி முறையில் பணிபுரிபவர்களின் மூளை திறனை விட தினமும் ஒரே முறையான நேரத்தில் பணிபுரியும் நபர்களின் ஞாபக சக்தி மற்றும் மூளை செயல்திறன் அதிகமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுழற்சி முறையில் பணிபுரிபவர்களின் உடல்நிலையில் உண்ணும், உறங்கும் நேரங்கள் மாற்றமடைவதால் அவர்களுக்கு இதயம், மூளை சார்ந்த பாதிப்புகள் ஏற்படும் எனவும், சில சமயங்களில் புற்றுநோய் பாதிப்பு கூட ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் தெரிகிறது. ஆய்வின் ஒரு பகுதியாக, சுழற்சி முறையில் பணிபுரிபவர்களுக்கு நடத்தப்பட்ட அறிவாற்றல் வேகம் சார்ந்த சோதனையில் பலர் தேர்ச்சி அடையவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. Your biological clock could confuse.
இது குறித்து டௌலோசி மற்றும் ஸ்வான்ஸி பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவிக்கையில், 'முறையற்ற ஷிப்டுகளில் 10 ஆண்டுகாலமாக பணிபுரிபவர்களின் அறிவாற்றல் திறன் 6 1/2 ஆண்டுகள் பின்தங்கியதாக உள்ளது' எனக் குறிப்பிட்டுள்ளனர்.  

காலை, மதியம், இரவு நேர சுழற்சி முறை ஷிப்டுகளில் பணிபுரியும் நபர்களுக்கு எவ்வாறு அறிவாற்றல் திறன் குறைகிறது என்பது குறித்த முழுமையான புரிதல் இல்லாத நிலையில், அவர்களின் உடல்நிலையில் ஏற்படும் மாற்றங்கள் இதற்கு காரணமாக இருக்கலாம் என கருதப்படுகிறது. maalaimalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக