சனி, 1 நவம்பர், 2014

கேரளாவில் BARகள் 250 மூடப்பட்டது இன்னும் 69 பார்கள் மட்டுமே உள்ளது ,அவையும் விரைவில் மூடப்படும்? கள்ளுக்கு தடையில்லை!

திருவனந்தபுரம்: கேரளாவில் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி நேற்று இரவோடு இரவாக 250 பார்கள் மூடப்பட்டன. இதனால் இன்று முதல் கேரளாவில் 62 பார்கள் மட்டுமே செயல்படும்.கேரளாவில் வரும் 10 ஆண்டுகளில் படிப்படியாக பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என முதல்வர் உம்மன்சாண்டி ஏற்கனவே அறிவித்திருந்தார். இதன்படி மதுவிலக்கை அமல்படுத்தும் நடவடிக்கையில் கேரள அரசு தீவிரம்காட்டி வருகிறது. கேரளாவில் மொத்தம் 5 ஸ்டார் ஓட்டல்களில் செயல்படும் பார்கள் உள்பட 730 பார்களும், 389 அரசு மதுபான கடைகளும் உள்ளன. இந்நிலையில் கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் தரம் இல்லாத 418 பார்கள் மூடப்பட்டன. இதையடுத்து 312 பார்கள் மட்டுமே இயங்கி வந்தன. இவற்றில் 5 ஸ்டார் ஓட்டல்களில் செயல்படும் 21 பார்களை தவிர மற்ற பார்களை மூட கடந்த இரு மாதங்களுக்கு முன் கேரள அரசு உத்தரவிட்டது.


இந்த உத்தரவை எதிர்த்து பார் உரிமையாளர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதை விசாரித்த உச்ச நீதிமன்றம் அக்டோபர் 30ம் தேதி வரை பார்கள் இயங்கலாம் எனவும், அதற்குள் இது தொடர்பான வழக்கில் கேரள உயர் நீதிமன்றம் தீர்ப்பளிக்க வேண்டும் எனவும் கூறியது. இதற்கிடையே கடந்த 2ம் தேதி முதல் 39 அரசு மதுபானக்கடைகள் மூடப்பட்டன. மேலும், அன்று முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் மதுக்கடை பார்களுக்கு விடுமுறையும் அளிக்கப்பட்டது. இந்நிலையில் கேரள உயர் நீதிமன்றத்தில் பார் உரிமையாளர்கள் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் 4 மற்றும் 5 ஸ்டார் நட்சத்திர ஓட்டல்களில் செயல்படும் பார்களை தவிர மற்ற அனைத்து பார்களையும் உடனடியாக மூட உத்தரவிட்டது. இதையடுத்து நேற்று இரவோடு இரவாக 250 டூ ஸ்டார் மற்றும் த்ரீ ஸ்டார் ஓட்டல்களில் செயல்பட்டு வந்த பார்கள் மூடப்பட்டன. இதனால் இன்று முதல் கேரளாவில் 62 பார்கள் மட்டுமே செயல்படும். இதில் 5 ஸ்டார் பார்கள் 21ம், 4 ஸ்டார் பார்கள் 33ம், ஹெரிடேஜ் பார்கள் 8ம் உள்ளன. இதற்கிடையே நேற்று கடைசி நாள் என்பதால் பல பார்களில் தள்ளுபடி விற்பனை நடந்தது - See more at: /tamilmurasu.org/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக