திங்கள், 24 நவம்பர், 2014

முதலமைச்சர் பன்னீர்செல்வம்? பிச்சை எடுக்கினும் பதவி நன்றே! ஒரு அடிமையின் Art of survival?

திமுக தலைவர் கலைஞர் எழுதியுள்ள கேள்வி - பதில் வடிவிலான அறிக்கை: கேள்வி:- நீங்கள் சட்டசபைக்கு வருவ தில்லை என்றும் பேரவையை எப்போது கூட்டுவது என அரசுக்குத் தெரியும் என்றும் ‘பினாமி’ முதலமைச்சர் பன்னீர்செல்வம் மீண்டும் பிதற்றி யிருக்கிறாரே?கலைஞர் :- தமிழக மக்களின் உயிர்நாடியான பிரச்சினைகள் பல எழுந்துள்ளன; அவசர முக்கியத்துவம் வாய்ந்த அந்தப் பிரச்சினை களைப் பற்றி விவாதிப்பதற்காகச் சட்டப்பேரவை யைக் கூட்ட வேண்டுமென்று நான் மட்டுமல்ல, பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்களும் திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், “சட்டப்பேரவையைக் கூட்டுக” என்றால் பன்னீர்செல்வம் பெரிதும் பதற்றமடைகிறார். ஒருவேளை சட்டப் பேரவையைக் கூட்டினால், தான் எங்கே அமர்வது? முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அமர்ந்திருந்த இடத்திலேயே அமர முடியுமா? என்றும்; தலைமைச் செயலகத்தில் இன்னும் முதலமைச்சர் அறைக்கே செல்ல முடியாமல், முதலமைச்சரின் ஆசனத்தில் அமர முடியா மல், ஏன்? முன்னாள் முதலமைச்சரின் கார் நிறுத்தப்பட்டிருந்த இடத்திலேகூட தன்னுடைய காரை நிறுத்த முடியாமல், முதலமைச்சர் என்றே
அழைத்துக் கொள்ள முடியாத வெட்கக் கேடான நிலை ஏற்பட்டிருக்கிறதே என்றும்; இருதலைக் கொள்ளி எறும்பாகத் தத்தளித்துக் கொண்டிருக்கும் தன்னைப் பார்த்து, இப்படியெல்லாம் எதிர்க் கட்சித் தலைவர்கள் தன்னை சங்கடப் படுத்து கிறார்களே என்ற பதற்றம் பன்னீர் செல்வத்தைப் பற்றிக் கொண்டு பாடாய்ப் படுத்துகிறது.

நான் ஏன் சட்டப்பேரவைக்குச் செல்ல முடிவ தில்லை என்ற கேள்விக்கு ஏற்கனவே பலமுறை பதில்
சொல்லிவிட்டேன். 

2013, நவம்பர் மாதத்திலும், 2014 ஜூன் மாதத்திலும் இந்தக் கேள்விக்கு நான் பதில் சொல்லியிருக்கிறேன். எனது உடல் நலம் கருதி, சட்டப்பேரவையிலே நான் அமர்வ தற்கு அ.தி.மு.க. ஆட்சியினர் முறையான இட வசதி செய்து தராத காரணத்தால், நான் சட்டப்பேரவைக்குச் செல்ல முடிவதில்லை என்று பதிலளித்திருக்கிறேன். ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தவரை, நான் சட்டப்பேரவைக்கு வந்துவிடக் கூடாது என்று, வேண்டுமென்றே சட்டப்பேரவையில் நான் அமர்வதற்கு ஏற்ற இடவசதி செய்து தரவில்லை. ‘பினாமி’ முதலமைச்சர் பன்னீர்செல்வமாவது எனக்கு உரிய இடவசதி செய்து கொடுப்பதோடு; தி.மு.கழகம் ஆட்சியில் இருந்தபோது, யாரோ எழுதிக் கொடுத்த கட்டுரையோடு எப்போதாவது அவைக்கு வந்து, கட்டுரையை அப்படியே படித்து விட்டு, அவர் வாசித்த பொய்ப் புகார்களுக்கு தி.மு.கழக ஆட்சியின் சார்பில் அளிக்கும் பதில்களைக் கேட்காமல் பொறுமையிழந்து ஜெயலலிதா வெளியேறிய போதெல்லாம், தி.மு.கழக உறுப்பினர்கள் கட்டுப்பாடு காத்து, அமைதியாக இருந்து ஜெயலலிதா படித்த உரையைக் கேட்டார்களே, அப்போது தி.மு.கழக உறுப்பினர்கள் கடைப்பிடித்த கண்ணியத்தைப் போல, இப்போது அ.தி.மு.க. உறுப்பினர்கள் நிச்சயம் கடைப்பிடிப்பார்கள் என்று உறுதி செய்து கொண்டு, பன்னீர்செல்வம் அறிவிப்பாரானால், சட்டப்பேரவைக்கு நான் செல்வதற்குத் தயாராகவே இருக்கிறேன்.

‘பனிப்போரைப்’ பற்றிய பன்னீர்செல்வத்தின் விமர்சனத்திற்கு ஏற்கனவே தம்பி மு.க.ஸ்டாலின் ‘பளிச்’செனப் பதிலளித்திருக்கிறார். “நான் தந்தைக்குக் கட்டுப்பட்ட தனயன்; தலைவரின்  கட்டளைக்குப் பணிந்து நடக்கும் தொண்டன்” என்று ஸ்டாலின் அளித்த பதிலை, பன்னீர்செல்வம் படித்துப் பார்க்கவில்லை போலும்! தந்தை - தனயன் என்ற பருப்பெல்லாம் இங்கே வேகாது என்பதைப் பன்னீர்செல்வம் புரிந்து கொள்ள வேண்டும். பருப்பு வாங்கும் டெண்டரில் 8000 கோடி ரூபாய் ஊழல் என்றும், அதற்கு சி.பி.ஐ. விசாரணைக்குத் தயாரா என்றும் டாக்டர் ராமதாஸ் கேட்டிருக்கிறாரே? அவருக்குப் பன்னீர்செல்வம் பதில் கூறட்டும்!

அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகச் சட்டப்பேரவை எந்த அளவுக்கு ஜனநாயகத்தைப் போற்றி நடத்தப்படுகிறது என்பதை நாடே நன்கு அறியும். அனைத்துத் துறைகளுக்குமான அறிவிப்பு களையும் முதலமைச்சரே 110வது விதியின்கீழ் படித்தல்; வெளிநடப்புகள் அல்லது வெளி யேற்றங் கள்; எதிர்க்கட்சியினர் பேசுவதற்கு உரிய வாய்ப்பு தராமை; ஆளுங்கட்சி பற்றியோ, முதலமைச்சர் பற்றியோ எதிர்க்கட்சியினர் யாராவது பேச முற்பட்டால், உடனே குறிப்பிட்ட சில அமைச்சர்கள் குறுக்கிட்டு, அவர்களைப் பேசவிடாமல் செய்தல்; அமைச்சர்கள் தங்கள் துறை சம்பந்தப்பட்ட மானியங்களுக்கு பதில் அளிக்கும்போது, முதலமைச்சருக்கு நீண்ட பாராட்டுப் புராணம் படித்தல்; என்னை எந்த அளவுக்கு விமர்சனம் செய்து தாக்கிப் பேசிட முடியுமோ, அந்த அளவுக்கு நாலாந்தர நடையில் பேசுதல்;என்பன போன்ற நடைமுறைகள் தொடரும் வரை தமிழகச் சட்டப் பேரவை ஜனநாயக மரபுகளின்படி நடைபெறுகிறது என்று எவராலும் சொல்ல முடியாது.

சட்டப்பேரவையில் ஆளுங்கட்சி உறுப் பினர்கள் என்றால், அமைச்சர்கள் என்றால், முதலமைச்சர் என்றால் எதை வேண்டுமென்றாலும் ஜனநாயக விரோதமாக விமர்சிக்கலாம்; எதிர்க்கட்சிகளை எப்படி வேண்டுமானாலும் இழித்தும் பழித்தும் பேசலாம்; ஆனால் எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள் ஆடாமல் அசையாமல், அனைத்தையும் அடக்க ஒடுக்கமாகக் கேட்டுக் கொண்டிருக்க வேண் டும்; அவைக்கு வராவிட்டாலும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த தலைவர்களை மனம் போனபடி தாறுமாறாகப் பேச வேண்டும்,

நஞ்சு கலந்த அந்த வார்த்தைகளை எல்லாம் எதிர்க்கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் செவியாறக் கேட்டுக் கொண்டு அச்சடித்த பதுமைகளைப் போல பொறுமையாக இருக்க வேண்டுமென்றால், அதற்குப் பெயர் ஜனநாயக முறைப்படி இயங்கும் மன்றமா?

கேள்வி :- 20-11-2014 அன்று நடைபெற்ற சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் மேயர் சைதை துரைசாமி தங்களையும், தி.மு. கழகத்தையும், முன்பு மேயர்களாக இருந்த தளபதி மு.க.ஸ்டாலின், தம்பி மா.சுப்பிரமணியன் ஆகியோரையும் வசை பாடியிருக்கிறாரே? கலைஞர் :- இப்படி அவர் வசை பாடுவது முதல் முறையல்ல; வசைபாடுவதற்கென்றே சென்னை மாநகராட்சி மன்றத்தைக் கூட்டு கிறார்கள். சென்ற முறை மாநகராட்சி மன்றக் கூட்டம் நடந்தபோதும், சுமார் ஒன்றரை மணி நேரம் என்னையும், தம்பி மு.க.ஸ்டாலினையும் சைதை துரைசாமி வசை பாடினார் என்று பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன. ஒவ்வொரு முறை அவர் வசை பாடிக் குற்றஞ்சாட்டும் போதும், தம்பி மா.சுப்பிரமணியன் விரிவாக பதில் அளித்திருக் கிறார். ஏற்கனவே பதில் அளிக்கப்பட்ட குற்றச் சாட்டுகளையே திரும்ப திரும்பச் சொல்லி, மன்றத் தின் நேரத்தை வீணாக்கிய தோடு, மன்ற உறுப்பினர்களுக்குத் தங்கள் பகுதிகளில் மக்கள் பிரச்சி னைகளை எடுத்துச் சொல்லித் தீர்வு காண்பதற்கான வாய்ப்பையும் மறுத்து வருகிறார் சைதை துரைசாமி.

இப்போதுகூட, தம்பி மா.சுப்பிரமணியன் மேய ருக்குப் பதில் அளித்து வெளியிட்ட அறிக்கையில்,
“மேயர் சைதை துரைசாமி வசித்து வரும், சிறு தாவூர், கொடநாடு பங்களாக்களுக்கு இணை யான
ராஜகீழ்ப்பாக்கத்தில் உள்ள 10 ஏக்கர் பண்ணை வீடு யாருக்குச் சொந்தம்?” என்று எழுப்பிய கேள்விக்குச் சைதை துரைசாமியின் பதில் என்ன?

“மேயர் சைதை துரைசாமி மீது ஊழல், கட்சி விரோத நடவடிக்கை, கட்சி நிர்வாகிகளை அவமதித்தது உள்ளிட்ட பல்வேறு புகார்கள் சென்றதால், அ.தி.மு.க. நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

மேலும், போஸ்டர் மற்றும் நோட்டீஸ்களிலும் அவரது பெயரைப் போடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும்; மேயர் சைதை துரைசாமி ராஜினாமா செய்து விட்டார் என்ற செய்தி பரவியதை அடுத்து “நீங்கள் ராஜினாமா செய்து விட்டீர்களா” என்று செய்தியாளர்கள் செல்போனில் தொடர்பு கொண்டு கேட்டபோது, “செத்த வனிடமே செத்து விட்டாயா என்று கேட் கிறீர்களே” என்று பதிலளித்தார் என்றும்; இன்றைய நாளேடுகள் செய்தி வெளியிட்டிருக்கின்றன. இந்தச் செய்திகள் தொடர்பாக மேலும் தகவல்கள் சென்னை மாநகர மக்களிடையே பரவாமல் இருக்க சைதை துரைசாமி, என்னையும் தி.மு.கழகத்தையும், தம்பி மு.க.ஸ்டாலினையும், தம்பி மா.சுப்பிரமணி யனையும் நினைத்து “தை தை” என்று ஆட்டம் போடாமல், சைதை துரைசாமி விளக்கம் அளித்திட முன்வர வேண்டுமென்றும்; சைதை துரைசாமி நேற்று டெல்லியில் நடை பெற்ற விழா ஒன்றில் சென்னை மாநகராட்சிக்கான விருதினைப் பெற்றுக் கொண்டு மாலையில் சென்னைக்குத் திரும்பினார் என்று செய்தி வெளியிட்டுள்ள இன்றைய “இந்து” ஆங்கில ஏடு,அதாவது “பெய்து வரும் கடும் மழையின் காரணமாக சென்னை மாநகரச் சாலைகள் அனைத்தும் நொறுங்கி அழிந்து கிடக்கின்றன. இந்த நிலையில், சென்னை மாநகரைச் சிறந்த மாநகரம் என்று தேர்ந்தெடுத்து விருது வழங்கியது முரண் நிகழ்ச்சிதான்” என்று முறையாக விமர்சித்திருப்பதற்கு, சைதை துரைசாமி பதில் அளிக்க வேண்டுமென்றும்; எல்லோரும் எதிர் பார்ப்பது இயல்புதானே?

கேள்வி :- 15-11-2014 தொடங்கி கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 9 கொலைகள் சென்னை மாநகரத்தில் நடைபெற்றிருக்கின்றனவே?

கலைஞர் :- நவம்பர்-15 அன்று புது வண்ணாரப்பேட்டையில் 35 வயது கர்ப்பிணிப் பெண் குணசுந்தரியும், அவருடைய 6 வயது மகன் மகேஷ்குமாரும் அவருடைய இரண்டாவது கணவர் ராஜூ என்பவரால் கொலை செய்யப் பட்டார்கள். அதே நவம்பர்-15 அன்று 32 வயது கனகராஜ் மண்ணடியில் உள்ள அறையில் பிணமாகக் கிடந்தார். நவம்பர்-17 அன்று மயிலாப்பூர் காமதேனு திரையரங்கம் அருகில் 28 வயது கார்த்திக் என்பவர் கும்பல் ஒன்றால் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.

 நவம்பர்-18 அன்று நெசப்பாக்கம் அருகில் 38 வயது விஸ்வநாதன் என்பவர் கும்பல் ஒன்றால் துரத்தப் பட்டு, கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். அதே 18ஆம் தேதியன்று தி.மு.கழகத்தைச் சேர்ந்த 87 வயது வேலியப்பன் சூளைமேட்டில் உள்ள அவரது வீட்டில் கொலை செய்யப்பட்டு, தங்க நகைகளும் கொள்ளை அடிக்கப்பட்டன. நவம்பர்-20 அன்று ஏற்கனவே திருட்டுக் கும்பலால் கடுமையான தாக்குதலுக்கு ஆளான மேடவாக்கத்தைச் சேர்ந்த 90 வயது மூதாட்டி புஷ்பராணி மருத்துவமனையில் மரண மடைந்தார். அதே 20ஆம் தேதி அன்று 49 வயது ஹேமாவதி என்பவர் காய்கறிகள் நறுக்கும் கத்தியால் கொலை செய்யப்பட்டார்; அவருடைய 7 சவரன் நகையும் கொள்ளை அடிக்கப்பட்டது. நவம்பர்-21 அன்று 48 வயது மஞ்சு தேவி சூளையில் உள்ள அவருடைய வீட்டில் கொலை செய்யப்பட்டு அவருடைய 1 கிலோ நகை கொள்ளை அடிக்கப்பட்டது.

“7 நாட்கள், 9 கொலைகள்: மாநகரம் பாது காப்பானதா?’’ (“7 னயலள, 9 அரசனநசள: ளை வாந உவைல ளயகந?”) என்ற தலைப்பில் ஆங்கில நாளேடான “இந்து” ஒரு செய்திக் கட்டுரையை வெளியிட் டுள்ளது. அதில் முதல் பத்தியிலேயே “ஆதாயக் கொலைகள் 4 உள்ளிட்ட 9 கொலைகள் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் நடைபெற்று, சென்னை மாநகரக் குடிமக்கள் மத்தியில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளன. சென்னை வாழ் மக்கள், மாநகரம் பாதுகாப்பானதா என்றும், காவல்துறை நடவடிக்கைகள் பற்றியும் கேள்வி எழுப்பிய வண்ணம் உள்ளனர்”.

நாளொரு கொலை, பொழுதொரு கொள்ளை, செயின் பறிப்பு - சென்னை மாநகரத்தில் மட்டு மல்லாமல், தமிழகம் முழுதும் நடந்து கொண்டிருக் கின்றன. இத்தகைய கொடூர நிகழ்வுகளால் அந்தந்தப் பகுதிகளில் உள்ள மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார்கள். ஆனால், ஆளும் அ.தி.மு.க.வினரோ பல்வேறு வகையான முறைகேடுகளில் மூழ்கி முத்தெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

கேள்வி :- மத்தியப் பணியாளர் தேர் வாணையம் (யு.பி.எஸ்.சி) நடத்தும் தேர்வுகளுக்கு நிர்ணயிக்  கப்பட்டிருந்த வயது வரம்பும், தேர்வு எழுதுவதற்கான வாய்ப்பு களின் எண்ணிக்கையும் குறைக்கப் பட்டிருப்ப தாகச் சொல்லப்படுகிறதே?

கலைஞர் :- மத்திய நிர்வாகச் சீர்திருத்த ஆணையம் தேர்வு எழுதுவோர்க்கான வயது வரம்பு, தேர்வு
எழுதுவதற்கான வாய்ப்புகளின் எண்ணிக்கை ஆகியவற்றை வெகுவாகக் குறைத்து, பரிந்துரை ஒன்றினை அளித்திருப்ப தாகவும்; இந்தப் பரிந்துரையினை மத்திய நிர்வாகத் துறை ஏற்றுக்கொண்டு,அதன் இணைய தளத்தில் வெளியிட்டுள்ளதாகவும் பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது. இந்தப் புதிய அறிவிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருப்ப தாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. மத்திய அரசு இப்படிப்பட்ட குழப்பத்தை நீக்கி, தெளிவு படுத்த வேண்டும்.

மத்தியப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ் போன்ற அகில இந்தியத் தேர்வுகளுக்கு பிற்படுத்தப்பட் டோருக்கு தற்போது உள்ள 21 வயது முதல் 33 வயது வரைஎன்பதை மாற்றி, 21 வயது முதல் 28 வயது வரை என்றும்; தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு தற்போது உள்ள 21 வயது முதல் 35 வயது வரை என்பதை மாற்றி, 21 வயது முதல் 29 வயது வரை என்றும்; பொதுப்பிரி வினருக்கு தற்போது உள்ள 21 வயது முதல் 30 வயது வரை என்பதை மாற்றி, 21 வயது முதல் 26 வயது வரை என்றும் மத்திய நிர்வாகச் சீர்திருத்த ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. 

மேலும், தேர்வு எழுதுவதற்கான வாய்ப்புகளைப் பொறுத்த வரை, பிற்படுத்தப்பட்டோருக்கு தற்போது 9 வாய்ப்புகள் என்று இருப்பதை  வாய்ப்புகள் என்றும்; தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி யினருக்கு தற்போது வாய்ப்புகளுக்கு வரம்பேதும் இல்லை என்ற நிலையை மாற்றி, 6 வாய்ப்புகள் என்றும்; பொதுப் பிரிவினருக்கு தற்போது 7 வாய்ப்புகள் என்று இருப்பதை, 3 வாய்ப்புகள் என்றும் மத்திய நிர்வாகச் சீர்திருத்த ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. இந்தப் பரிந்துரை களைத்தான் மத்திய நிர்வாகத் துறை ஏற்றுக் கொண்டுள்ளதாக செய்தி வெளியானது.

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற தேர்வுகளுக்கு தற்போது நிர்ணயம் செய்துள்ள வயது வரம் பினையும்,தேர்வு எழுதுவதற்கான வாய்ப்புகளின் எண்ணிக்கை யையும் குறைத்தால், அதனால் பெரிதும்பாதிப்புக்கு ஆளாவது பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின இளைஞர்களே ஆவர். அனைத்துப் பிரிவுகளையும் சேர்ந்த கிராமப்புற மாணவர் களும் இந்த மாற்றத்தால் பாதிக்கப்படுவார்கள்.

எனவே, வயது மற்றும் வாய்ப்புகள் பற்றி மத்தியப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுகளை எழுதத் தயாராகிக் கொண் டிருக்கும் இளைஞர்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் குழப்பத்தைப் போக்கி; தற்போது உள்ள வரம்புகளில் எந்த மாற்றமும் இல்லை என்ற அறிவிப்பினைச் செய்து; இளைஞர்கள் உற்சாகமான மனநிலையில் தேர்வுகளுக்குத் தயாராகும் நல்ல நிலையினை ஏற்படுத்த மத்திய அரசு முன்வர வேண்டுமென்று வலியுறுத்துகிறேன்.nakkheeran.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக