வியாழன், 6 நவம்பர், 2014

அதிருப்தி தேமுதிக 9 எம்எல் ஏக்களும் பாஜக போகிறார்கள் , அதிமுக சொன்னபடி சூட்கேஸ் பண்ணலையாம்ல ?

சென்னை: தேமுதிக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 9 பேரும் ஏகோபித்த முடிவு ஒன்றுக்கு வந்துள்ளனர். இனியும் அதிமுகவை நம்பி குப்பையைக் கிளறிக் கொண்டிருக்க முடியாது. பேசாமல் போய் பாஜகவில் சேர்ந்து விடலாம் என்பதுதான் அந்த முடிவாம். ஜெயலலிதா இனியும் லைம் லைட்டுக்குத் திரும்புவார் என்ற நம்பிக்கையை அவர்கள் இழந்து விட்டார்களாம். அதை விட முக்கியமாக அதிமுகவுக்கு ஆதரவாக திரும்பினால் தருவதாக சொன்ன எதையுமே அதிமுககாரர்கள் தரவில்லை என்ற பெரும் அதிருப்தி அவர்களிடம் உள்ளதாம். இதன் காரணமாக சமீபத்தில் 9 பேரும் கூடிப் பேசி பாஜகவில் போய் கலந்து விடலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளனராம்.
tamil.oneindia.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக