திங்கள், 10 நவம்பர், 2014

நைஜீரியாவில் 47 பள்ளி மாணவர்கள் பலி ! இஸ்லாமிய தற்கொலை படை தாக்குதல்?

At least 46 students have been killed by a suicide bomber at a school assembly in the north-eastern Nigerian town of Potiskum, police have said.  The militant group Boko Haram is believed to have carried out the attack, police said.வடகிழக்கு நைஜீரியாவில் உள்ள பள்ளியில் இன்று காலை வகுப்பு தொடங்குவதற்க்கு முன் பள்ளி வளாகத்தில் மாணவர்கள் அனைவரும் காலை வழிபாடு நடத்தவதற்க்கு ஒன்று கூடி நின்றனர். அந்நேரத்தில்  மாணவர்கள் மத்தியில் தற்கொலை படை தீவிரவாதி ஒருவர் தாக்குதல் நடத்தியதில் பள்ளி மாணவர்கள் 47 பேர் பலியாகினர்.79 பேர் படுகாயம் அடைந்தனர். தற்கொலை படை தீவிரவாதி தாக்குதல் நடத்தியதில் படுகாயம் அடைந்த மாணவர்களை அருகில் உள்ள மருத்துவனைக்கு சிகிச்சைக்காக சேர்க்கபட்டு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.dailythanthi.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக