சனி, 8 நவம்பர், 2014

கிடப்பில் போடப்பட்டுள்ள தமிழ்நாடு ? 110 விதி அறிவிப்பு திட்டங்கள் தொடங்கப்படவே இல்லை.

பெரம்பலூர்: தமிழகத்தில் செயல்படாத ஆட்சி, கோமாளி ஆட்சி நடக்கிறது என்று பெரம்பலூரில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேசினார்.பெரம்பலூர், அரியலூர் மாவட்ட திமுக பொது உறுப்பினர் கூட்டம் பெரம்பலூரில் நேற்று மாலை நடந்தது. பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:தமிழக அளவில் 24 மாவட்டங்களில் ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. இன்னும் 10 நாட்களில் இதர மாவட்டங்களிலும் ஆய்வுப்பணிகள் நடத்தி முடிக்கப்பட்டுவிடும். கடந்த தேர்தலில் திமுக தோல்வியடைந்தது. எத்தனை பெரிய சோதனைகள், வேதனைகள் வந்தபோதும் அயராமல் கம்பீரமாகமாக நிற்கக்கூடிய இயக்கம்தான் திமுக. எந்த தீயசக்தியாலும் இந்த இயக்கத்தை தொட்டுப்பார்க்கக்கூட முடியாது. தமிழகத்தில் இப்போது பினாமி ஆட்சி தான் நடந்துவருகிறது. ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற கல்லூரி மாணவர்கள் கருத்து தெரிவிக்கையில், மத்தியில் ஆட்சி மாற்றத்தை இளைஞர்கள் எதிர்பார்த்தனர். அதேபோல மாநிலத்திலும் ஆட்சி மாற்றத்தை எதிர்பார்க்கும் நிலை உருவாகியுள்ளது என்றனர். இக்கருத்து எனக்கு புதுநம்பிக்கையை அளித்துள்ளது. ஓட்ரா ராஜா ஓட்ரா ராஜா ஓடு .....


சமூக வலைதளங்கள் மூலம் மாணவர்கள், இளைஞர்களை ஒருங்கிணைக்க வேண்டும். ஒருவருக்கு ஒரு பொறுப்பு, சுழற்சி அடிப்படையில் பொறுப்புகள் தரவேண்டுமென வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள அதிமுக அரசு அடிப்படை கட்டமைப்புக்கு மூடு விழா நடத்தியுள்ளது என ஒரு ஆங்கில நாளேடு கருத்து தெரிவித்துள்ளது. அதில் ரூ.25 ஆயிரம் கோடி மதிப்பிலான தேசிய நெடுஞ்சாலைப் பணிகள் இந்தஆட்சியில் கிடப்பில் போடப்பட்டுள்ளது. ரூ.38,800 கோடி மதிப்பிலான மின் உற்பத்தித் திட்டங்கள் தொடங்கப்படாமல் உள்ளது. 110 விதியின்கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும் செயல்படுத்தப்படாமல் உள்ளது.ஜெயலலிதாவின் மூன்றரை ஆண்டு ஆட்சியில் ரூ.80 ஆயிரம் கோடி ரூபாய்க்கு அறிவிக்கப்பட்ட திட்டங்களில் ஒரு கோடிக்கான திட்டம் கூட செயல்படுத்தப்படவில்லை. இந்த ஆட்சி இரு முதல்வர்களைக் கொண்டும், 2 தலைமைச் செயலாளர்களைக் கொண்டும், 2 டிஜிபிக்களைக் கொண்டும் இயங்கிவருகிறது.

அரசுத்துறை அலுவலகங்கள் மட்டுமன்றி, காவல்நிலையத்தில் கூட குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஜெயலலிதா படம்தான் வைக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா படங்களை அகற்றாவிட்டால், அகற்றவைக்க வேண்டிய நிலைதான் இனி ஏற்படும். செயல்படாத ஆட்சி, கோமாளி ஆட்சி நடக்கிறது. பால் கட்டண உயர்வு, மின்கட்டண உயர்வு, வெள்ள பாதிப்புகளை கண்டுகொள்ளாத அமைச்சர்கள் என்ற நிலை கேலிக் கூத்தாக உள்ளது. 2016 சட்டமன்றத் தேர்தலில் உணர்வுகளைத் தீட்டி, ஜெயலலிதா பினாமி ஆட்சிக்குப் பாடம்புகட்ட அனைவரும் முன்வர வேண்டும்.இவ்வாறு மு.க. ஸ்டாலின் பேசினார்.
tamilmurasu.org

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக