புதன், 15 அக்டோபர், 2014

Sasikala defacto CM of Tamilnadu ! தினமும் 4 மந்திரிங்க தொண்டர்களோடு ஜெயில் வாசலில் காத்திருக்க சசிகலா உத்தரவு !

சிறையில் இருந்து, சசிகலா கூறிய யோசனை 
பெங்களூருக்கு வர வேண்டாம்' என, தமிழக அமைச்சர்கள், ஆளுங்கட்சியினருக்கு விதிக்கப்பட்டிருந்த தடை திடீரென்று விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. தினமும், நான்கு அமைச்சர்கள், அவர்களது மாவட்டத்தைச் சேர்ந்த எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை வளாகம் முன் ஆஜராக வேண்டும் என, புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.அதன்படி நேற்று, அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி, விஜயபாஸ்கர் ஆகியோர் பெங்களூரு சென்றனர். இந்த அமைச்சர்களின் மாவட்டங்களைச் சேர்ந்த, எம்.பி.,க் கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள், மாவட்டச் செய லர் மற்றும் நிர்வாகிகள் எல்லாரும் நேற்று, சிறை வளாகம் முன் திரண்டிருந்தனர்.   மக்களுக்கு சேவை செய்ய இந்த கும்புடு சாமிகளை தேர்ந்தெடுத்தால், ஊழல் குற்றவாளி ஜெயாவுக்கு ஜெயில் காவலுக்கு போகிறார்களாம்.   இந்த ஜெயில் லலிதா கும்பல் தமிழக ஜெயிலுக்கு வந்தால்,  ஜெயில் முன்னால் ஷெட் கட்டி அதற்க்கு கும்பாபிஷேகம் செய்து விடுவார்கள். உள்ளே போயும் இன்னும் திருந்தாத ஜென்மங்கள் இவர்கள் மட்டும் தான். இதெற்கெல்லாம் பொறுப்பு இந்த ஈன தமிழக வாக்காளர்கள் தான். நாசமாக போகட்டும் இந்த நாதிகெட்ட தமிழ்நாடு.
யோசனை:சிறையில் இருந்து, சசிகலா கூறிய யோசனை படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அ.தி.மு.க.,வினர் தெரிவித்தனர். தினமும் எந்தெந்த அமைச்சர்கள் பெங்களூரு செல்ல வேண்டும் என்பதை முடிவு செய்யும் பொறுப்பு, உயர் கல்வித் துறை அமைச்சர் பழனியப்பனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவர் போட்டுத் தரும் பட்டியல்படி அமைச்சர்களும், மாவட்ட அ.தி.மு.க.,வினரும் செயல்பட வேண்டும் என்றும், சிறையில் இருந்து ஜெயலலிதா வெளியே வரும் நாள் வரை, இது தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அ.தி.மு.க.,வினர் மேலும் கூறிய தாவது:
கர்நாடக உயர் நீதிமன்றத்தில், ஜெயலலிதா உள்ளிட்ட, நான்கு பேரின் ஜாமின் மனுக்கள் தொடர்பான விசாரணை நடந்த நேரத்தில், அமைச்சர்கள், அதிகாரிகள், எம்.பி., -எம்.எல்.ஏ.,க்கள் இங்கே வருவதை, ஜெயலலிதா விரும்பவில்லை.

திருப்பம்:சிறை வாசலிலும், உயர் நீதிமன்ற வளாகத்திலும் கட்சியினர் கூட்டம் போடுவதை நீதிபதிகள் ரசிக்க மாட்டார்கள் என்பதால், இந்த தடை விதிக்கப்பட்டது.எனினும், முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், கே.பி.முனுசாமி, செ.ம.வேலுச்சாமி, பச்சைமால் உள்ளிட்டசிலர் தினமும் அங்கு வந்து சென்றனர்.இப்போது, ஜாமின் மனு விசாரணை, உச்ச நீதிமன்றத்திற்கு போய் விட்டது. இந்த நேரத்தில், பரப்பன அக்ரஹாரா சிறை வாசல், வெறிச்சோடி இருந்தால், ஜெயலலிதாவுக்கு ஆதரவு குறைந்து விட்டது என, கர்நாடக தலைவர்கள் கருத வாய்ப்பாகி விடும்.அப்படியொரு எண் ணம் உருவாவதை தடுக்க, மீண்டும் கட்சியினருக்கு அனுமதி தரப்பட்டுள்ளது. ஆனால், கண்டபடி வந்து குவிவதை தவிர்ப்பதற்காக, தினமும், நான்கு அமைச்சர்கள் வீதம் வருகை தர உத்தரவிடப்பட்டுள்ளது.சிறையில் இருக்கும் ஜெயலலிதா,யாரையும் சந்திப்பதும் இல்லை; பேசுவதும் இல்லை. சசிகலா தான் எல்லா உத்தரவுகளையும பிறப்பித்து வருகிறார். இந்த யோசனையையும் அவரே தெரிவித்துள்ளார். அதன்படி, நேற்று, நான்கு அமைச்சர்கள் அவசர அவசரமாக பெங்களூரு சென்றனர். அவர்களது மாவட்டங்களான, திண்டுக்கல், தஞ்சாவூர், சேலம், புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த, அ.தி.மு.க., எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் கட்சியினரும், நேற்று, சிறை வாசலில் திரண்டனர். காலையில் இருந்து மாலை வரை காத்திருந்து விட்டு திரும்பினர்.இவ்வாறு, அ.தி.மு.க.,வினர் தெரிவித்தனர்.
- நமது சிறப்பு நிருபர் -தினமலர்.com 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக