புதன், 1 அக்டோபர், 2014

இந்தியா இந்துஸ்தான் என்றால் அமெரிக்கா கிருஸ்துஸ்தான் ! மோடியின் RSS சுயரூபம் அமெரிக்காவில் அரங்கேற்றம்

மோடி! மோடி! என்று மகிமை உண்டாக்க அரும் பாடுபட்டு அமெரிக்காவை ஆர்.எஸ்.எஸ். கும்பல் ஆட்டிவைக்கப் பார்த்தனர். குஜராத்தியர் நல்ல வியாபாரிகள். அனைத்துத் தந்திரங்களையும், மந்திரங் களையும் பயன்படுத்தினர். கூட்டத்தையும் சேர்த்தனர். அரசியல்வாதிகளையும் கொண்டுவந்து படம் காட்டினர்.
மோடி ஒன்றும் அமெரிக்காவிற்குப் புதிதானவர் அல்லர். 1990ஆம் ஆண்டுகளிலேயே அமெரிக்காவின் பல நகரங்களிலே பலருடன் தங்கியிருந்து ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை வளர்த்தவர். நியூயார்க்கைத் தளமாகப் பயன் படுத்தி வாழ்ந்தவர்.
மோடி, தான் ஒரு ஆர்.எஸ்.எஸ்.காரர் என்பதை நன்கு வெளிப்படுத்தினார். பேச்சில் "பாரத்" "இந்துஸ்தான்"தான்  மிகுதி. "இந்தியா"வையேக் காணோம்.
பெரிய மனதுடன் வந்திருந்த இஸ்லாமியத் தோழர்களைப் பற்றி ஒரு வார்த்தைகூட இல்லை. ஏமாற்றம் அவர்களது முகங்களில் என்று சென்றவர்கள் சொன்னார்கள். இந்தியாவின் வரலாற்றைப் புகழ்ந்தவர் இந்தியரில் பலருக்கு ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுக்கும் கூடச் சரி சமமாகப் படிப்புக் கொடுத்ததே கிருத்துவக் கல்விக்கூடங்கள்தானே. அதை மறைக்க முடியுமா?
அமெரிக்காவின் பணம் வேண்டும், தொழில் வேண்டும் ஆனால் இந்துத்துவாதான் இந்தியா என்று சொல்லி இந்தியாவை விற்றுக் கொண்டுள்ள மோடி மகிமை எடுபடுமா? இந்தியா "இந்துஸ்தான்" என்றால் அமெரிக்கா "கிருஸ்துஸ்தான்" என்பதுதான் உண்மை. பணம் எவ்வளவு தூரம் பாயும் என்பது தெரிந்து விடும். மோடிக்கு வரலாறு காணாத கூட்டம் என்று இந்திய இதழ்கள், இணைய மக்கள் சொன்னாலும், பல இருக்கைகள் காலியாகவே உள்ளன.... கடந்த ஒரு வாரமாக என்று சொல்லி சொல்லி வேறு...!!!
இதோ நிழற் படம்.... பாரத் மாதாகீ ஜே!!!

viduthalai.in/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக