ஞாயிறு, 26 அக்டோபர், 2014

Coca Cola நடிகன் விஜய் கத்தியில் வாந்தி ! அதிமுகவில் சரத்குமாரின் இடத்தை பிடிக்க முயற்சி?

அதிமுகவை குளிரவைக்க சினிமாக்காரர்கள் வழக்கமாக கையாளும் கேவலமான டெக்னிக்கை நடிகன் விஜயும் கப்சா முருகதாசும் கத்தி படத்தில் செய்துள்ளார்கள்.
2G உத்தேச இழப்பு என்பதை திமுகவினதும் ராஜாவினது ஊழல் என்பதாக திரித்து ஆதிக்க ஜாதியினர் வழக்கு தொடுத்துள்ளனர். அதை 2g ஊழல் என்பதாக கத்தி படத்தில் விஜய் கூறியுள்ளார். நீதிமன்றத்தில் உள்ள ஒரு விடயத்தை ஊழல் என்று தீர்ப்பாகவே கூறியுள்ள விஜய். நீதிமன்றத்தில் தண்டிக்கப்பட்ட ஜெயலலிதாவின் பொது சொத்து கொள்ளையை பற்றி பேசியிருந்தால் அது சரியாக இருந்திருக்கும், அதற்கு தைரியம் இல்லை, அம்மாவின் குண்டர் படை வெறியாட்டம் ஆடிவிடுமே? ஊருக்கு இளைச்சவன் பிள்ளையார் கோவில் ஆண்டி என்பது போல் வசதியாக திமுகவின் மீது சொரிந்து சுகம் கண்டுள்ளார் நடிகன் விஜயும்  இயக்குனர் முருகதாசும்
இந்த நடிகன் விஜய் கோகா கோலா கம்பனியிடம் ஏராளமான பணத்தை வாங்கி பிராண்ட் அம்பாசிடராக உள்ளார் . ஆனால் கத்தி வசூலுக்கு காப்பரெட் எதிர்ப்பு மசாலாவை தூவி உள்ளார், இது பெரிய மோசடி அல்லவா ? முருகதாஸ் என்பவர் முன்பு ஏழாவது மனிதனுக்கு வசூலோ வசூல் என்று பச்சை பொய் கணக்கு காட்டி சாயம் கழன்று போனவர்,
மீண்டும் மீண்டும் சினிமாக்காரர்கள் தமிழனத்தின் விரோதிகள் என்பதை புருப் பண்ணுகிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக