வெள்ளி, 31 அக்டோபர், 2014

காட்சிக்கு தேவை என்று ஆடைகுறைப்பு? பாவம் சுனைனா ?

சென்னை: பாவாடை கட்டி குளிக்க மறுத்து விவாதம்  செய்தார் சுனேனா.விஜய் சேதுபதி, கிருஷ்ணா, சுனேனா நடிக்கும் படம் ‘வன்மம். இதுபற்றி இயக்குனர் ஜெய்கிருஷ்ணா கூறியது:ஒருவர் பேசும்பேச்சு மனிதனை சந்தோஷப்படுத்தும் அல்லது காயப்படுத்தும். இருநண்பர்களிடையே எழும் பிரச்னையில் ஒருவர் சொல்லும் கடுமையான ஒரு வார்த்தை அந்த நட்பையே முறித்துவிடுகிறது. அதன்பிறகு அவர்கள் வாழ்க்கை எப்படி திசைமாறுகிறது என்பதே கதை. விஜய்சேதுபதிக்கு ஆக்ஷன் நிறைந்த கதாபாத்திரம், கிருஷ்ணாவுக்கு காதலுடன்கூடிய ஜாலியான கதாபாத்திரம். 2 ஹீரோக்கள் இருந்தாலும் கிருஷ்ணாவுக்கு மட்டும்தான் ஜோடி. சுனேனா நடிக்கிறார். கிராமப்புறங்களில் குளம், கண்மாயில் குளிக்கும் பெண்கள் பாவாடையை மார்புவரை கட்டிக்கொண்டு குளிப்பார்கள். அப்படியொரு காட்சி இப்படத்துக்கு தேவைப்பட்டது. சுனேனாவிடம் அதுபோல் உடை அணியும்படி கேட்டபோது, அப்படி நடிக்க முடியாது என்று  நீண்ட நேரம் விவாதம் செய்துகொண்டிருந்தார். காட்சிக்கு முக்கிய தேவை என்பதால் கண்டிப்பாக நடிக்க வேண்டும் என்றேன். கடைசியில் ஒப்புக்கொண்டு நடித்தார்.
நவம்பர் 2வது வாரம் இப்படம் ரிலீஸ் ஆகிறது. பாலபரணி ஒளிப்பதிவு. எஸ்.எஸ்.தமன் இசை. வி.ஹித்தேஷ் ஜெபக் தயாரிப்பு.
.tamilmurasu.org

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக