புதன், 8 அக்டோபர், 2014

ஈரானில் கற்பழிக்க முயன்றவனை கொன்ற பெண்ணுக்கு தூக்கு தண்டனை ?

ஈரானை சேர்ந்த பெண் ரெகானே ஜப்பாரி (26). கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு தன்னை கற்பழிக்க முயன்ற ஒருவனை கத்தியால் குத்தி கொலை செய்தார். அதனால் கைது செய்யப்பட்ட ஜப்பாரிக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
அதை எதிர்த்து அவர் மேல் முறையீடு செய்தார். அங்கும் அவரது தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டது. இதற்கிடையே கொலை செய்யப்பட்டவரின் உறவினர்கள் அவரை மன்னிக்க மறுத்ததால் இன்று அவர் தூக்கிலிடப்படுகிறார்  என தகவல் பரவியது . ஆனால் அவரது தண்டனை மீண்டும் ஒத்தி வைக்க பட்டுள்ளதாக தெரிகிறது, ம்ம்ம் காட்டு மிராண்டிகள் தேசம் . சகோதரத்துவம் அன்பு என்றெல்லாம் ரொம்ப சத்தம் போடும் மதவாதிகள் வெட்கி தலை குனியவேண்டும்,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக