ஞாயிறு, 12 அக்டோபர், 2014

புரட்சி பேசும் மலையாள நடிகர் பிருத்விராஜ் குழந்தைக்கு ஜாதி பெயர் வைத்தார்!

சென்னை:சாதி பெயரை இணைத்து குழந்தைக்கு பெயர் சூட்டிய பிருத்விராஜுக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது.‘அபியும் நானும், ‘மொழி உள்ளிட்ட பல்வேறு தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்திருப்பவர் பிருத்விராஜ். மனைவி சுப்ரியா மேனன். சமீபத்தில் இந்த ஜோடிக்கு பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு அலன்கிரிதா மேனன் என பெயரிட்டிருப்பதாக இணைய தள பக்கத்தில் தகவல் வெளியிட்டார் பிருத்வி. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. எப்போதும் சாதி மறுப்பு பற்றி பேசும் பிருத்விராஜ் தனது குழந்தையின் பெயரோடு சாதி பெயரை இணைத்தது ஏன்? என்று சரமாரியாக கேள்வி கேட்டு மெசேஜ் வெளியிட்டுள்ளனர். மேனன்  நாயர்   நம்பூதிரி என்ற ஜாதிபெயர்களை தங்கள் பெயருக்கு பின்னால் போட்டுக்கொள்ளும் மலையாளிகள் பேசுவது தங்களை ஏதோ புத்தி ஜீவிகள் என்றும் தமிழர்கள் எல்லாம் பாமரர் என்றும் கருதுவது வேடிக்கை ? இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும்தான் ஜாதிபெயரை போட்டுகொள்வது அவமானம் என்று கருதும் நாகரீகம் இருக்கிறது, எல்லாம் பெரியார் தந்தது !
இதற்கு பதில் அளித்த பிருத்விராஜ்,‘என் மகளின் பெயர் குறித்து பலர் கருத்து தெரிவித்துள்ளனர். எப்போதுமே நான் சாதிக்கு எதிராகவே பேசி இருக்கிறேன். ஏனென்றால் சாதியை அடிப்படையாக வைத்து இன்னமும் பலர் பலவழிகளில் ஏமாற்றப்படுகின்றனர். எப்போதும் நான் சாதியை எதிர்ப்பவன்தான். என் மனைவியை தொழில் ரீதியாக மேனன் என்றே அழைக்கிறார்கள். மேனன் என்ற வார்த்தையை ஒரு பெயராக மட்டுமே கணக்கில் எடுத் துக்கொள்ளுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் சர்ச்சை அடங்கவில்லை. குழந்தைக்கு சாதியை இணைத்து பெயர் சூட்டிய விவகாரத்தில், விளக்கம் கூறியதுடன் சர்ச்சையை முடிவுக்கு கொண்டுவர நினைத்த பிருத்விராஜ், குழந்தைக்கு வாழ்த்து கூறியவர்களுக்கு நன்றி தெரிவித்து உள்ளார்.tamilmurasu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக