சென்னை: குழந்தை திருட்டை மையமாக வைத்து ‘கத சொல்லப் போறோம்‘ படம் உருவாகிறது. இதுபற்றி இயக்குனர் எஸ்.கல்யாணம் கூறியது:குழந்தைகளை திருடிச் செல்லும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. அதனால் பெற்றோர்கள் படும் வேதனை சொல்லி மாளாது. இதை மையமாக வைத்தும் அனாதை ஆசிரமத்து மாணவர், மாணவிகளுக்கும் அருகே உள்ள வசதியான பள்ளி மாணவ மாணவிகளுக்கும் இடையே நடக்கும் கலாட்டாவையும் இக்கதையில் கூறியிருக்கிறேன். இதில் ஆடுகளம் நரேன், விஜயலட்சுமி, காளி, சிவகுமார், குழந்தை நட்சத்திரங்கள் ஷிபானா, ரவீணா, அருண் அரவிந்த், ராகுல், சாமு, அர்ஜூன் நடிக்கின்றனர். ஜெபின் ஒளிப்பதிவு. பவன் இசை. எஸ்.கல்யாண், ஜே.ஜெயகிருஷ்ணன் தயாரிப்பு.tamilmurasu.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக