வெள்ளி, 3 அக்டோபர், 2014

பெண்கள் ஜீன்ஸ் அணிந்து ஆண்களை கெடுக்கிறார்களாம் ! சேட்டன் ஜேசுதாஸ் கண்டுபிடிப்பு !

திருவனந்தபுரம்: இந்தியப் பெண்கள் ஜுன்ஸ் அணிந்து ஆண்களின் மனதைக் கெடுக்கிறார்கள் என்று பிரபல பின்னணிப் பாடகர் கேஜே யேசுதாஸ் தெரிவித்துள்ள கருத்து பெண்கள் அமைப்புகள் மத்தியில் புயலைக் கிளப்பியுள்ளது.  பல மகளிர் அமைப்புகள் வெளிப்படையாக கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் நடைபெற்ற காந்தி ஜெயந்தி விழாவில் கலந்து கொண்டு பேசிய யேசுதாஸ், "பெண்கள் ஜீன்ஸ் அணிந்து மற்றவர்களுக்கு தொல்லை தரக்கூடாது என்றார். எதை மறைத்து வைக்க வேண்டுமோ அதை மறைத்தே இருக்க வேண்டும்," என்றார்.யேசுதாஸ் கருத்தைக் கண்டித்து மகிளா காங்கிரஸ் அமைப்பினர் திருவனந்தபுரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த கோழி இறைச்சி பிரியர் பக்தி ததும்ப கச்சேரி செய்கையில் மனசாட்சி குத்தலையோ ? இந்தியாவில் உள்ள அத்தனை மாநில மத்திய அரசுகளின் சலுகைகளையும் பட்டங்களையும் பெற்று கொண்டு அமெரிக்காவில் தனது மகன்மாரை படிக்க வைத்து அங்கேயே செட்டில் ஆக முயற்சித்தது எந்த வகை கலாசாரத்தில் சேர்த்தி ? பதில் சொல்லு தாசு ? அப்புறம் அங்கு ஒண்ணும் சரிவராம போக திரும்பி ஊருக்கு வந்து கலாசாரம் புண்ணாக்கு என்று வாயில் வந்த படி எல்லாம் பேசுறாரு . அது சரி சேட்டா சுமார் இருபது வருஷங்களுக்கு முன்பு வாய்ஸ் பாங்குன்னு ஒன்னு தொடங்குனியே ஞாபகம் இருக்கா ? அது இன்னாச்சு ? ஒரு மகன்மாரையும் உருப்படியா சங்கீத வித்வானக்க முடியல்ல . ரொம்ப கலாசார சமாச்சாரங்கள் உன்வீட்டில் நடக்குது ? முதல்ல உன் வீட்டில கலாச்சாரத்தை பாதுக்காக்க முயற்சித்தால் நல்லது . சும்மா நம்ம வாயை கிளறாதே
யேசுதாஸ் தனது கருத்தை திரும்பப் பெற வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். கேரளா மட்டுமின்றி நாடு முழுவதும் பெண்களிடையே எதிர்ப்பு அலைகளை ஏற்படுத்தியுள்ளது. யேசுதாஸ் சிறந்த பாடகர்தான். அதற்காக பெண்களுக்கு எதிராக அவர் இஷ்டத்துக்கும் கருத்து தெரிவிப்பதை ஏற்பதற்கில்லை என்று மகளிர் அமைப்பு தலைவி பிந்து மாதவி தெரிவித்தார்.
tamil.filmibeat.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக