புதன், 22 அக்டோபர், 2014

செல்வராகவன் மீண்டும் படம் ? இரண்டாம் உலகத்தின் கதை என்ன என்று ஒரு documentary எடுக்கலாமே ?

டைரக்ஷனிலிருந்து ஒதுங்கி இருக்க முடிவு செய்த செல்வராகவன் மீண்டும் இயக்குவதற்கு தயாராகிறார்.‘ஆயிரத்தில் ஒருவன், ‘இரண்டாம் உலகம் படங்கள் எதிர்பார்த்த வெற்றி பெறாததாலும், அப்பட தயாரிப்பாளர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டாலும் செல்வராகவனுக்கு புதிய படம் இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டது.  ஆனாலும் தனுஷ் நடிக்க ‘இது மாலை நேரத்து மயக்கம் படத்தை இயக்க எண்ணினார். பிறகு அதை நிறுத்தி வைத்தார். இதற்கிடையில் செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி இயக்குனராக அறிமுகமாக முடிவு செய்தார். அப்படத்துக்கு ‘மாலை நேரத்துமயக்கம் என்ற டைட்டில் வைத்தார். செல்வராகவனின் கதையைத்தான் கீதாஞ்சலி இயக்குகிறார் என்று கூறப்பட்டது. நெசமாலுமே  இரண்டாம் உலகம்  ரொம்ப  டிஸ்டர்ப் பண்ணுது.  என்னா கதை அதுன்னு  புரியல்லாசாமி 
ஆனால் ‘படத்தின் டைட்டில் மட்டுமே கீதாஞ்சலிக்கு தந்ததாகவும், அவர் இயக்குவது எனது ஸ்கிரிப்ட் இல்லை என்றும் செல்வராகவன் கூறினார். குழந்தைகளுடன் நேரம் செலவழிப்பதற்காக படம் இயக்குவதை தள்ளிப்போட்டிருப்பதாக செல்வராகவன் தரப்பில் கூறப்பட்டது.இந்நிலையில் அவர் இணைய தள பக்கத்தில் புதியபடத்துக்கு ரெடியாகி இருப்பதுபற்றி தகவல் வெளியிட்டார். ‘இறுதியில் புதுபட ஸ்கிரிப்ட் ரெடியாகிவிட்டது என அவர் குறிப்பிட்டிருக்கிறார். இதில் தனது ஆஸ்தான ஒளிப்பதிவாளர் அரவிந்த் கிருஷ்ணா, இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுடன் இணைய உள்ளாராம். - tamilmurasu.org/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக