வெள்ளி, 24 அக்டோபர், 2014

பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.ஆர். காலமானார்

சென்னை: உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ். ஆர். இன்று மரணம் அடைந்தார். சிவாஜி கணேசனின் முதல்படமான பராசக்தி மூலம் கோலிவுட் வந்த நடிகர் எஸ்.எஸ். ராஜேந்திரன். லட்சிய நடிகர் என்று அழைக்கப்பட்ட எஸ்.எஸ். ராஜேந்திரன் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.  இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலை மரணம் அடைந்தார். அவருக்கு வயது 87. திமுகவில் சேர்ந்த எஸ்.எஸ்.ஆர். கட்சிக்காக பாடுபட்டார். கடந்த 1962ம் ஆண்டு அவர் தேனி தொகுதியில் இருந்து திமுக சார்பில் சட்டசபைக்கு தேர்வானார்.
நம் நாட்டிலேயே எம்.எல்.ஏ.வான முதல் நடிகர் எஸ்.எஸ்.ஆர். என்பது குறிப்பிடத்தக்கது. அவர் நடிகை விஜயகுமாரி உள்ளிட்ட 3 பெண்களை திருமணம் செய்தார். அவருக்கு மொத்தம் 9 குழந்தைகள் உள்ளனர். காலத்தால் அழியாத பல படங்களில் நடித்தவர் எஸ்.எஸ்.ஆர். அவரது மறைவுக்கு திரை உலகினர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.
//tamil.filmibeat.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக