ஞாயிறு, 5 அக்டோபர், 2014

அழுது புலம்பி சீன் காட்டிய அமைச்சர்கள் பதவி காலி ? அம்மா அதிரடி முடிவு ?

பதவி ஏற்பு விழாவில், தைரியத்தை இழந்து அழுது புலம்பிய அமைச்சர்கள் மீது, அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா கடும் கோபத்தில் இருப்பதாக தெரிகிறது. ஜாமின் பெற்ற பிறகு, கட்சியிலும், ஆட்சியிலும், அதிரடி நடவடிக்கைகளை அவர் மேற்கொள்வார் என தகவல் வெளியாகி  உள்ளது ஜெயலலிதாவின் முதல்வர் பதவி பறிபோனதை அடுத்து, புதிய முதல்வராக, ஓ. பன்னீர் செல்வம் தேர்ந்தெடுக்கப்பட்டார். பதவி ஏற்பு விழாவில், முதல்வர் பன்னீர்செல்வமும், அமைச்சர்களும், தேம்பி அழுதபடியே பதவி ஏற்றனர்.   ஊழலில் சம்பாதித்து பல நூறு கோடிகளுக்கு அதிபதியான அமைச்சகள் நிச்சயமாக உண்மையாய் அழுதிருக்க மாட்டார்கள். அப்படி ஒரு இரக்க உணர்வு, தர்ம சிந்தனை இருப்பவர்கள் பதவி ஆசையில் இப்படிப்பட்ட ஊழலில் ஊறிய மட்டை கட்சிகளில் சேர்ந்து துட்டு சேர்க்க ஆசைப்பட மாட்டார்கள். மொத்தத்தில் இவர்கள் ஒரு மோசடி கூட்டம். அவர்கள் அழுது ஆர்ப்பாட்டம் செய்துவது நடிப்பே என்பதே அவர்களின் படத்தை பார்த்தாலே தெரிகிறது. சிலர் சிரிப்பார். சிலர் அழுவார். இவர்கள் சிரித்துகொண்டே அழுகிறார்கள் என்பதே உண்மை
ஜெயலலிதா மீதான கைது நடவடிக்கையால், அவர்கள் சோகத்தில் இருப்பதை, இச்சம்பவம் வெளிக்காட்டியது. ஆனால், இப்பதவி ஏற்பு விழாவையொட்டி, பல அமைச்சர்கள், தங்களது நண்பர்களையும், உறவினர்களையும் சென்னைக்கு வரவழைத்தனர். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அரசு பங்களாக்களில் அவர்களை தங்கவைத்தனர். பலர் ஓட்டல்களிலும் தங்க வைக்கப்பட்டனர்.

இப்படி வெளியூர்களில் இருந்து வந்தவர்களுக்கு, பிரபல ஓட்டல்களில் இருந்து வரவழைக்கப்பட்ட, உணவு உபசரிப்பும் நடந்திருக்கிறது. சோகத்தில், உள்ளதாக காட்டிக் கொண்ட, சில அமைச்சர்களின் இந்த செயல்பாடுகள் குறித்த தகவல்கள், ஜெயலலிதாவின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டிருப்பதாக தகவல். தனது கைது சம்பவத்திற்கு பிறகு, தமிழகத்தில் நடந்து வரும், சம்பவங்கள் குறித்து, தன்னை சந்தித்த, அமைச்சர் ஒருவரிடம், ஜெயலலிதா வருத்தத்துடன் பகிர்ந்து கொண்டதாக, அந்த அமைச்சர் சொல்லி வருகிறார். இதனால், ஜெயலலிதா ஜாமின் பெற்று சிறையில் இருந்து வெளியே வந்ததும், கட்சியிலும், ஆட்சியிலும் பல்வேறு அதிரடி காட்சிகள் அரங்கேறும் என, கூறப்படுகிறது.

- -நமது நிருபர் -- dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக