வியாழன், 9 அக்டோபர், 2014

பாகிஸ்தான் உளவாளி அருண் செல்வராசனை காவலில் விசாரிக்க மீண்டும் மனு !

அருண்செல்வராசனை காவலில் எடுத்து விசாரிக்க தேசிய புலனாய்வு அதிகாரிகள் மீண்டும் மனு பாகிஸ்தான் உளவாளியாக செயல்பட்ட ஜாகீர் உசேன் கடந்த வருடம் தேசிய புலனாய்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து அவரது கூட்டாளிகள் சிவபாலன், முகமதுசலீம், ரசீக் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.இவர்களிடம் நடத்திய விசாரணையில் சென்னை விருகம்பாக்கம் சாலிகிராமத்தில் தங்கியிருந்து பாகிஸ்தானுக்கு உளவு சொன்ன இலங்கையை சேர்ந்த அருண் செல்வராசன் என்பவன் கைது செய்யப்பட்டான்.அனைவரும் பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். சொத்துகுவிப்பு கிளிசரின் காவியத்தின் களேபரத்தில் இவனை மீடியாக்கள் கொஞ்சம்  மறந்திட்டாய்ங்க போல ?
அருண் செல்வராசனை 18–ந்தேதி முதல் 23–ந்தேதி வரை காவலில் எடுத்து தேசிய புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தினார்கள். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.<பின்னர் நீதிமன்ற காவல் முடிந்ததையடுத்து அருண் செல்வராசன் உள்பட 5 பேர் பூந்தமல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களது காவலை 15–ந்தேதி வரை நீட்டித்து நீதிபதி மோனி உத்தரவிட்டார்.இந்த நிலையில் அருண் செல்வராசனை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் இன்று மீண்டும் மனுதாக்கல் செய்தனர். இந்த மனு நாளை விசாரணைக்கு வரும் எனத் தெரிகிறது. nakkheeran,in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக