புதன், 29 அக்டோபர், 2014

நடிகை சுவேதா உயிருக்கு விபசார வழக்கில் சிக்கிய தொழில் அதிபர்களால் ஆபத்து?

Hyderabad: Month after her arrest, it has been reported that actress Shweta Basu might have been facing life threat as a few business tycoons are scared thinking their names may have been revealed in the prostitution case.
சென்னை: விபசார வழக்கில் சிக்கிய நடிகை சுவேதாவின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக திரையுலகில் பரபரப்பாக பேசப்படுகிறது.தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்திருப்பவர் சுவேதா பாசு. கடந்த மாதம் இவர் விபசார தடுப்பு சட்டத்தின் கீழ் ஐதராபாத் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவர் மகளிர் காப்பகத்தில் தங்கி இருக்க கோர்ட் உத்தரவிட்டது. அதன்படி, காப்பகத்தில் தங்கி இருக்கிறார். இதற்கிடையில் தனது மகளை காப்பகத்தில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று சுவேதாவின் தாயார் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இருப்பினும் சுவேதா விடுவிக்கப்படவில்லை.இதற்கிடையில், சுவேதாவை விபசாரத்தில் ஈடுபடுத்திய முக்கிய புள்ளி யார் என்பதை பகிரங்கமாக போலீசார் அறிவிக்க வேண்டும் என்று சில நடிகர், நடிகைகள் வலியுறுத்தி வருகின்றனர்.


 இந்நிலையில், சுவேதாவின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று திரையுலகை சேர்ந்த சிலர் அச்சம் தெரிவித்துள்ளனர். ‘சுவேதாவை தொடர்ந்து காப்பகத்தில் வைத்திருந்தால் தன்னை விபசாரத்துக்கு அழைத்த முக்கிய புள்ளி பற்றிய ரகசியத்தை அவர் வெளியிடுவார். இதனால் பிரச்னை ஏற்படும். அதற்கு முன்பே சுவேதாவை காப்பகத்தில் இருந்து விடுவித்தால் யார் பெயரையும் வெளியிடாமல் நடிப்பில் கவனம் செலுத்தத் தொடங்கிவிடுவார்‘ என்று அவர்கள் கூறுகின்றனர். எவ்வளவு விரைவில் அவர் வெளியே வருகிறாரோ அது அவருக்கு பாதுகாப்பாக இருக்கும். இல்லாவிட்டால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று திரையுலகில் பரபரப்பாக பேசப்படுகிறது. - See more at: tamilmurasu.org/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக