திங்கள், 27 அக்டோபர், 2014

கேரளாவில் BJP குண்டர்களின் இளம் ஜோடிகளுக்கு எதிரான வெறியாட்டத்தை கண்டித்து முத்தம் கொடுக்கும் போராட்டம் ஆயத்தம்!



திருவனந்தபுரம்: கேரளாவில் 'யுவ மோர்ச்சா' அமைப்பிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பொது இடத்தில் தங்களது ஜோடியுடன் கட்டி பிடித்து முத்தம் கொடுக்கும்  போராட்டத்தை நடத்த  சில இளைஞர்கள், இளம்பெண்கள் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
கடந்த 23 ஆம் தேதி கோழிக்கோட்டில் உள்ள ரெஸ்டாரென்ட் ஒன்றில் கலாச்சாரத்திற்கு விரோதமான நிகழ்ச்சிகள் நடைபெறுவதாகக் கூறி தாக்குதலில் ஈடுபட்ட பா.ஜனதாவின் கிளை அமைப்புகளில் ஒன்றான 'யுவ மோர்ச்சா' அமைப்பைக் கண்டித்து, நவம்பர் 2 ஆம் தேதியன்று இந்த போராட்டம் நடை பெறவுள்ளது.
இரண்டொரு நாளில்  இது தொடர்பாக ஃபேஸ்புக் பக்கம் ஒன்றும்  உருவாக்கப் பட உள்ளது. அதில் போராட்டத்தில் கலந்து கொள்ள விரும்பும் ஜோடிகள் தங்களது பெயர்களைப் பதிவு செய்துகொள்ளலாம்  என்றும் கூறப்படுகிறது.
ரெஸ்டாரென்ட் தாக்குதல் சம்பவம்   தொடர்பாக 'யுவமோர்ச்சா' அமைப்பின் பிரநிதிகள், காவல்துறை யினரால் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது விகடன்,com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக