வியாழன், 30 அக்டோபர், 2014

ஆவின் பால் பெட்டியெல்லாம் மினி சுப்பர் மார்கெட் ? அடாவடி ஆக்கிரமிப்பு !

இதில் அப்போது என்பது, தி.மு.க., ஆட்சியையும், இப்போது என்பது அ.தி.மு.க., ஆட்சியையும் குறிப்பதாக புரிந்து கொள்ள வேண்டும். இதற்கு உதாரணத்தை, தேடிப்போய் நீங்கள் பார்க்க வேண்டியதில்லை. மாநில நெடுஞ்சாலை, மாநகராட்சி சாலைகள், அரசு அலுவலக வளாகங்களில் பார்த்தாலே, அப்பட்டமாய்த் தெரிந்து விடும். தி.மு.க., ஆட்சியின் போது, மதுக்கரை ரோட்டில் செம்மொழிப் பூங்கா அமைக்கப்பட்ட இடத்திலும், அரசு கலை அறிவியல் கல்லூரி அருகில் அமைக்கப்பட்ட நடைபாதையிலும், பல கோடி ரூபாய் மதிப்பில் அகலப்படுத்தப்பட்ட பங்கஜா மில் ரோடு, பாலக்காடு ரோடு உள்ளிட்ட பல இடங்களிலும், இன்றைக்கு காளான்களைப் போல 'ஆவின் பாலகங்கள்' முளைத்து வருகின்றன. ஆவின் பூத் என்பது, ஆவின் பால் பாக்கெட்களை மட்டும் விற்பதற்காக, உருவாக்கப்பட்ட விற்பனை மையம். நகர்ப்புறங்களில், குடியிருப்புப் பகுதிகளில், 4 அடிக்கு 4 அடி என்ற அளவில், ஆவின் நிறுவனமே வழங்கும் இரும்புப் பெட்டிகள் தான், ஆவின் பூத் என்றழைக்கப்படுகின்றன. ஆவின் பால் பாக்கெட்களை பத்திரப்படுத்துவதற்காக இவை வழங்கப்படுகின்றன. இன்று வரை, இந்த ஆவின் பூத்களில் பால் பாக்கெட்களைத் தவிர, வேறு எதுவும் விற்கப்படுவதில்லை. நல்ல வேளை சின்னதா 10 க்கு 10 பொட்டி கொடுத்தாங்க, கொஞ்சம் பெரிசா கொடுத்தா அதவே நைட்டு பூரா லாட்ஜு ஆக்கி காசு பாத்துடுவாணுக.


கோவை ஆவின் நிறுவனத்தில், தினமும் தயாராகும் ஒன்றரை லட்சம் லிட்டர் பால் பாக்கெட்களில், பெரும்பான்மையானவற்றை விற்பனை செய்வது, இந்த பூத்கள் தான். மீதமுள்ள 40 ஆயிரம் லிட்டர் பாலை, மதிப்பு கூடுதல் பொருட்களாக மாற்றி, தயிர், மோர், நெய், பால்கோவா, பால் பேடா, பாதாம் பால் போன்ற பொருட்களாக ஆவின் நிறுவனம் விற்பனை செய்கிறது. இவற்றை விற்பனை செய்வதற்காக, உருவாக்கப்பட்ட புதிய விற்பனை யுக்திதான், ஆவின் பாலகம்.அதாவது, பால் பாக்கெட் உட்பட ஆவின் நிறுவனத்தின் அனைத்துத் தயாரிப்புகளையும் விற்பனை செய்யும் இடம் தான் இந்த பாலகம் (AAVIN PARLOUR). அந்த பாலகங்கள் தான், இப்போது கோவை நகரிலுள்ள ஆளும்கட்சியினர் பலருக்கு பணம் காய்க்கும் மரங்களாக மாறியிருக்கின்றன. ஆவின் உற்பத்திப் பொருட்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டிய இந்த பாலகங்கள், இப்போது முழு நேர ஓட்டல்களாகவே மாறி விட்டன.
பெயரளவுக்கு ஆவின் பொருட்களை வைத்துள்ள இந்த ஆவின் பாலகங்களில், சாப்பாடுப்

பொட்டலங்கள், வடை, போண்டா, குளிர் பானங்கள், பழங்கள், பாக்கெட் உணவுகள், சிகரெட் என எல்லாமே விற்கப்படுகின்றன. ஆனால், நிபந்தனைகளை மீறி, ஆவின் பொருட்களைத் தவிர, வேறு பொருட்களை விற்பதற்காக, இதுவரை எந்த பாலகத்தின் அனுமதியையும் ஆவின் நிறுவனம் ரத்து செய்ததாக, சரித்திரம், பூகோளம் எதுவுமேயில்லை.ஆவின் அனுமதி பெற்ற பூத்கள் மற்றும் பாலகங்களின் எண்ணிக்கை பற்றி, தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலமாக ஆவின் நிறுவனத்திடம் தகவல் வாங்கியதில், 71 ஆவின் பூத்களுக்கும், 50 ஆவின் பாலகங்களுக்கும் அனுமதி தரப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. இவற்றில் பெரும்பாலானவை, கோவை நகருக்குள் தான், அமைக்கப்பட்டுள்ளன.எப்படி அனுமதி தரப்படுகிறது?< ஆளும்கட்சியில் செல்வாக்குள்ள நபர்களுக்கு தான், இந்த பாலகம் வைக்க அனுமதி கிடைக்கும். அவர்களின் குடும்பத்தில் அல்லது உற்றார், உறவினர்களில் உள்ள யாராவது ஒரு மாற்றுத் திறனாளி அல்லது மனநலம் பாதிக்கப்பட்டோர் பெயரில், கலெக்டர், மாநில நெடுஞ்சாலைத்துறை அல்லது மாநகராட்சி நிர்வாக அதிகாரிகளுக்கு ஒரு மனு கொடுக்கப்படும். அதன் அடிப்படையில், காலியாகவுள்ள அரசு இடத்தில், ஆவின் பாலகம் வைத்துக்கொள்ள அனுமதி தரப்படும். பெயரளவுக்கு மாதாந்திர வாடகையும் நிர்ணயம் செய்யப்படும். காவல் துறையும், காசை வாங்கிக்கொண்டு, தடையின்மைச் சான்று அளிக்கும். இடத்துக்கான அனுமதி கிடைத்த பின், அங்கு ஆவின் பாலகம் வைப்பதற்கான அனுமதியை ஆவின் நிறுவனம் வழங்கும். இவ்வாறு, அனுமதி பெறும் ஆளும்கட்சியினர், அதனை மாதம் 25 ஆயிரம் ரூபாய் அல்லது அதற்கும் அதிகமான வாடகைக்கு வேறு நபர்களுக்குக் கொடுத்து விடுகின்றனர். உள் வாடகைக்கு எடுக்கும் நபர்கள், இரு விதமான வாடகை, மின் கட்டணம், இதர செலவுகளையும் மீறி லாபம் பார்ப்பதற்காக, விதிகள் மற்றும் நிபந்தனைகளை மீறி, எல்லாப் பொருட்களையும் விற்கின்றனர்.

ஒரு ஆவின் பாலகத்தில், எல்லாச் செலவும் போக, ஒரு நாளுக்கு 5 ஆயிரம் ரூபாயிலிருந்து 7 ஆயிரம் ரூபாய் வரை லாபம் கிடைப்பதாக, ஆளும்கட்சியினரே அதிர்ச்சிக் கணக்கு சொல்கின்றனர். இதன் விளைவாக, கோவையில் பரபரப்பான போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாட்டமுள்ள எல்லா இடங்களிலும், ஆவின் பாலகம் அமைப்பது அதிகரித்து வருகிறது. அதாவது, 'ஆவின்' என்ற பெயரில், அரசு இடங்களை ஆக்கிரமிப்பதற்கு, சட்டப்பூர்வமாக அனுமதி தரப்படுகிறது. இது தொடரும்பட்சத்தில், எதிர்காலத்தில், நகரமெங்கும் 'ஆவின் பாலகங்கள்' ஆக்கிரமிப்பது உறுதி.இதே நகரில், தனியாருக்குச் சொந்தமான இடங்களில், பல லட்ச ரூபாய் அட்வான்ஸ் கொடுத்து, வாடகை செலுத்தி, முறைப்படி லைசென்ஸ் எடுத்து, உணவு பாதுகாப்புத்துறையிடம் பதிவு செய்து, பேக்கரி மற்றும் ஓட்டல் நடத்துவோர் ஏராளம். வணிகவரி, வருமான வரி, தொழில் வரி என எல்லா வரியும் செலுத்தும் அவர்கள், இத் தொழிலில் சந்திக்கும் சங்கடங்களுக்கும் குறைவில்லை.

ஆனால், அரசு இடத்திலேயே விதிகளை மீறி, எந்த விதமான ஆய்வுகளுக்கும் உட்படாமல், உணவுப் பொருட்களை விற்கும் கொடுமை அரங்கேறி வருகிறது. ஆளும்கட்சி விவகாரம் என்பதால், இந்த அத்துமீறலுக்கு அரசுத்துறைகளே அமோக ஆதரவு அளித்து வருகின்றன. நடைபாதை, சாலைகள் ஆக்கிரமிக்கப்படுவதால், நடக்க முடியாமல், வாகனங்களை இயக்கவும், நிறுத்தவும் முடியாமல் பொது மக்கள் அவதிப்படுகின்றனர்; விபத்தை சந்திக்கின்றனர். மக்களின் மீது அக்கறையுள்ள அரசாக இருந்தால், இத்தகைய ஆக்கிரமிப்புகள் அனைத்தையும் ஒரே உத்தரவில் அகற்ற வேண்டியது அவசியம். இதெல்லாம் 2 ஆண்டுகளுக்குள் நடக்குமா என்பது தான் சந்தேகம்.>நோட்டீஸ் மட்டும் தான் தர முடியும்! ஆவின் பாலகங்களின் அத்து மீறல் பற்றி, கோவை ஆவின் பொது மேலாளர் ரவிக்குமாரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது: எங்களைப் பொறுத்தவரை, ஆவின் உற்பத்திப் பொருட்களின் விற்பனையை மேம்படுத்துவது மட்டுமே ஒரே நோக்கம். ஆவின் பால் பாக்கெட்களை விற்கும் பூத்களுக்கான பெட்டிகளை மட்டுமே, நாங்கள் வழங்குகிறோம். ஆவின் பாலகங்கள் நடத்தப்படும் பெரிய பெட்டிகளை நாங்கள் வழங்குவது இல்லை. நெடுஞ்சாலைத்துறை, மாநகராட்சி போன்ற துறைகளுக்குச் சொந்தமான இடங்களில், அந்த பெட்டிகளை வைக்க அந்தந்த துறையிடம் அனுமதி பெற்று, அதன் பின்பே எங்களுக்கு விண்ணப்பிக்கின்றனர். அதன் அடிப்பைடயில், எங்கள் பொருட்களை விற்பதற்கு மட்டுமே அனுமதி வழங்குகிறோம். அதற்காக, 30 ஆயிரம் ரூபாய் டெபாசிட் வசூலித்து, நிபந்தனைகளும் விதிக்கிறோம். ஆவின் பாலகம் என்று பெயர் வைத்திருந்தால், எங்களது உற்பத்திப் பொருட்களைத் தவிர, வேறு எந்தப் பொருளையும் விற்கக்கூடாது. அப்படி விற்றால், நோட்டீஸ் வினியோகிக்கிறோம். ஆனால், இடம் எங்களுக்குச் சொந்தமானது இல்லை என்பதால், அவற்றை அகற்றும் அதிகாரம்
எங்களுக்கில்லை. இவ்வாறு கோவை ஆவின் பொது மேலாளர் ரவிக்குமார் தெரிவித்தார். கோவை நகரில், மாநகராட்சிக்குச் சொந்தமான நைடபாதைகள் மற்றும் சாலையோரங்களில், 'ஆவின் பாலகங்கள்' என்ற பெயரில், 'மினி ஓட்டல்'கள் நடத்துவது பற்றி, கோவை மாநகராட்சி கமிஷனர் கணேஷிடம் கேட்டதற்கு, ''நான் வந்த பின், ஒரு ஆவின் பெட்டிக்குக் கூட, அனுமதி தரவில்லை. இதற்கு முன்பு, எந்த முறையில் அனுமதி வழங்கியுள்ளார் என்பதை, ஆவணங்களைப் பார்த்தே பதில் கூற முடியும். விதிமீறல் இருந்தால், கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

மாநில நெடுஞ்சாலைத்துறை சாலைகளில், 'ஆவின் பாலகங்கள்' என்ற பெயரில், அதிகளவில் ஆக்கிரமிப்புக் கடைகள் வைக்க அனுமதித்துள்ளது பற்றி, இத்துறையின் கோவை கோட்டப் பொறியாளர் கண்ணனிடம் கேட்டதற்கு, ''ஆவின் பாலகம் அமைப்பதற்காகவே, மாற்றுத் திறனாளிகள் போன்றோருக்கு மட்டுமே அனுமதி தருகிறோம். வழிகாட்டி மதிப்பின் படி, வாடகை நிர்ணயித்து, அதனை அரசிடமும் முறைப்படி செலுத்தி வருகிறோம்,'' என்றார்.
நிபந்தனையும், நிஜமும்!
பூத் மற்றும் பாலகங்களுக்கு அனுமதி தரும்போது, ஆவின் நிர்வாகம் தரும் நிபந்தனைகளில், 'தனியார் பால் பொருட்கள், தின்பண்டங்கள், புகையிலைப் பொருட்கள் எதையும் விற்கக்கூடாது. நிபந்தனைகளை மீறினால், எந்த நேரத்திலும், எந்தவித முன்னறிவிப்புமின்றி உரிமையை ரத்து செய்ய ஒன்றியத்திற்கு (ஆவின்) முழு அதிகாரம் உள்ளது' என்று கூறப்பட்டுள்ளது. உண்மையில் ஆவின் பால் பாக்கெட்ைடத் தவிர, எல்லா உணவுப்பொருட்களுேம இங்கு விற்கப்படுகின்றன. ஆனால், ஒரு பாலகத்தின் உரிமம் கூட, இதுவரை ரத்து செய்யப்பட்டதேயில்லை. இதுபற்றி ஆவின், மாநில நெடுஞ்சாலைத்துறை மற்றும் மாநகராட்சி நிர்வாக அதிகாரிகளிடம் கேட்டால், அவர்கள் தரும் பதில்கள், ஒன்றுக்கொன்று முரண்பாடாகவும், பொறுப்பைத் தட்டிக் கழிப்பதாகவும் உள்ளன. கிட்டத்தட்ட ஓட்டல்களைப் போலவே, எல்லா உணவுப் பொருட்களையும் விற்கும் இந்த பாலகங்களை, உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்களும் கண்டுகொள்வதேயில்லை. இதுபற்றி கருத்து கேட்பதற்காக, கோவை மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து கட்டுப்பாட்டுத்துறை நியமன அலுவலர் கதிரவனை தொடர்பு கொண்டபோது, அவரிடம் பதில் பெறவே முடியவில்லை. கவனிக்காமலிருக்க 'கவனிப்பு':
ஆவின் பாலகங்களுக்கு 10 அடிக்கு 10 அடி அல்லது 10 அடிக்கு 8 அடி என்ற அளவில், பெட்டி வைப்பதற்கு ஆவின் நிர்வாகம் அனுமதி தருகிறது. ஆனால், இந்த பெட்டிகளை வைக்கும் இடங்களைச் சுற்றியுள்ள இடங்களையும் ஆக்கிரமித்து, 'ஷெட்' அமைத்து, ரோட்டோரத்திலேயே காஸ் சிலிண்டர்களை வைத்து சமைக்கின்றனர்; அங்கேயே மாவு அரைக்கின்றனர்.இதனால் ஏற்படும் சுகாதாரக்கேடு, ஆபத்து போன்றவற்றைத் தடுக்க வேண்டிய மாநகராட்சி, மாநகர காவல்துறை என எல்லாத்துறைகளும், இந்த பாலகங்கள் நடத்துவோரிடம் மாமூலை வாங்கிக் கொண்டு மவுனம் சாதிக்கின்றன.தினமலர்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக