ஞாயிறு, 19 அக்டோபர், 2014

கலைஞர் :ஜெயலலிதாவின் தண்டனைக்காக மகிழவும் இல்லை ! ஜாமீனுக்காக வருத்தப்படவும் இல்லை !

ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு தனி நீதிமன்றத்தில் நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்ஹா அவர்கள் கடந்த செப்டம்பர் 20ஆம் தேதியன்று தீர்ப்பளிக்கப் போவதாக அறிவித்தார். ஆனாலும் குற்றஞ்சாட்டப்பட்டோர் தங்களின் பாதுகாப்புக் கருதி, தீர்ப்பினை செப்டம்பர் 27ஆம் தேதிதான் வெளியிட வேண்டு மென்று கோரிக்கை வைத்து, அதையும் நீதிபதி ஏற்றுக்கொண்டு, செப்டம்பர் 27ஆம் தேதியன்றே தீர்ப்பினை அளித்தார்.
அந்தத் தீர்ப்பில் ஜெயலலிதாவுக்கு நூறு கோடி ரூபாய் அபராதமும், நான்காண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.மேலும் சசிகலா, இளவரசி,வி.என். சுதாகரன் ஆகியோருக்கும் நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா பத்துக் கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

இதற்கான ஆதாரங்களையும், சாட்சியங்களையும் சட்ட விதி முறைகளின் அடிப்படையில் குறிப்பிட்டு நீதிபதி ஜான் மைக்கேல் டி. குன்ஹா 1136 பக்கங்களில் விரிவான தமது தீர்ப்பில் விளக்கி யிருக்கிறார்.
இந்தத் தீர்ப்பு வெளியானவுடன், அதைப் பற்றி நான் எந்தவிதமான கருத்தும் தெரிவிக்கவில்லை. காரணம், இது முக்கியமான வழக்கு என்பதால், எச்சரிக்கை உணர்வுடன் பொறுமையாக இருந்து தீர்ப்பு முழுவதையும் கவனமாகப் படித்த பிறகு விளக்கலாம் என்று எண்ணினேன்.
மேலும் அ.தி.மு.க.வின் தலைவிக்கு தண்டனை வழங்கப் பட்டுவிட்டது என்பதற்காக நான் மகிழ்ச்சி அடையவும் இல்லை; தற்போது அவர் உச்சநீதிமன்றத்தில் நிபந்தனை ஜாமீனில் விடுதலை பெற்றுவிட்டார்  என்பதற்காக வருத்தப்படவும் தயாராக இல்லை. என்று கருணாநிதி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். dinamani.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக