செவ்வாய், 7 அக்டோபர், 2014

ஜெயா ஜாமீனுக்காக கடவுளுக்கும் லஞ்சம் கொடுக்க எண்ணும் அதிமுக அடிமைகள் ?

சென்னை: பரப்பன அக்ரஹாரா சிறையில் ஜாமீனுக்காக காத்திருக்கிறார் ஜெயலலிதா.. தமிழகத்திலோ பட்டி தொட்டியெங்கும் அவருக்காக எத்தனை எத்தனை பிரார்த்தனைகள், போராட்டங்கள்... கடந்த 27ந் தேதி முதல் தமிழகம் முழுக்க பல இடங்களில் தற்கொலைகள், தீக்குளிப்புகள், தூக்கில் தொங்கிய சம்பவங்கள் ஏராளம் ஏராளம்... கடையடைப்புகள், பஸ் மறியல், பஸ் ஊழியர் போராட்டங்கள் ஏராளம், ஏராளம்... திரைத்துறையினர் உண்ணாவிரம், பல்துறையினர் நடத்திய சிறப்பு பூஜைகள், யாகங்கள் ஏராளம்.. ஏராளம்...  மொட்டை போடுதல், தீச்சட்டி ஏந்துதல், தீக்குழி இறங்குதல் ஏராளம்.. ஏராளம்...  உண்ணாவிரதங்கள், பள்ளிவாசல்களில் தொழுகைகள், கோவில்களில் மண் சோறு சாப்பிடுதல், சர்ச்சுகளில் பிரார்த்தனைகள் ஏராளம்.. ஏராளம்...  தண்ணீரில் மிதந்து வேண்டுதல், அன்னதானங்கள், விளக்கு பூஜைகள் ஏராளம்.. ஏராளம்... இன்னும் இன்னும் எத்தனை எத்தனை வேண்டுதல்கள்.. அத்தனையும் ஜெயலலிதா என்ற  ஊழல் அரசியல்வாதிக்கு !
/tamil.oneindia.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக