வியாழன், 2 அக்டோபர், 2014

பொள்ளாச்சி மகாலிங்கம் மரணம் ! வள்ளலார் விழாவில் பேசிக்கொண்டு இருக்கையில் மாரடைப்பு !

சென்னையில் நடந்த விழா ஒன்றில் வள்ளலார் குறித்து சொற்பொழிவாற்றியபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு பிரபல தொழிலதிபரும், சக்தி குழுமத் தலைவருமான பொள்ளாச்சி நா. மகாலிங்கம் மரணமடைந்தார். மேடையில் மயங்கிச் சரிந்த அவரை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். சென்னை ஏவி.எம். ராஜேஸ்வரி கல்யாண மண்டபத்தில் இன்று மாலை ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பொள்ளாச்சி நா. மகாலிங்கம் வள்ளலார் குறித்து உரையாற்றினார். பேசிக் கொண்டிருந்தபோது திடீரென அவர் மயங்கிச் சரிந்து விட்டார். உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே கடுமையான மாரடைப்பால் மரணமடைந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 91 வயதான பொள்ளாச்சி நா. மகாலிங்கம், கல்விச் சேவையிலும், ஆன்மீகத்திலும் சிறந்து விளங்கியவர். சக்தி குழுமத்தின் தலைவராக இருந்தவர். காந்தியவாதியாகவும், ராமலிங்க அடிகளார், வள்ளளலார் மீது மிகுந்த ஈடுபாடும் கொண்டவர்.
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக