செவ்வாய், 21 அக்டோபர், 2014

இளையராஜா :ஐ டியுனில் எனது பாடல்களை தரவிறக்கம் செய்யவேண்டாம் ? வருமானம் குறைகிறதாம் ?

சென்னை,அக்.20 (டி.என்.எஸ்) பெரும் மோசடி செய்துள்ள அகி மியூசிக் வெளியிடும் எனது சிடிக்களை வாங்க வேண்டாம், என்று இசையமைப்பாளர் இளையராஜா, தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:உலகம் முழுதும் வசித்து வரும்  அன்பான என் ரசிகர்களே, நான் இசைமைத்த பல்வேறு படங்களின் பாடல்களை மலேசியாவை சேர்ந்த அகி மியூசிக் நிறுவனத்தின் அகிலன் லட்சுமணன் என் அனுமதி இல்லாமல் முறைகேடாக விற்பனை செய்து வருகி்றார்கள். இப்படி பல ஆண்டுகளாக விற்று வரும் அகி நிறுவனம் எனக்கு சேர வேண்டிய ராயல்டியையும் கொடுக்காமல் ஏமாற்றி வருகிறது. இதனால் எனக்கு பெரிய அளவில் பொருள் இழப்பு ஏற்பட்டுள்ளது.
நீதிமன்றம் அகிலன் லட்சுமணன் நிறுவனத்திற்கு தடை உத்தரவு போட்டிருக்கிறது. ஆனாலும் தொடர்ந்து பாடல்களை விற்பனை செய்து வருவதாக அறிகிறேன். அதனால் ரசிகர்கள் யாரும் அகி மியூசிக் உள்ளிட்ட நிறுவனங்கள் விற்பனை செய்யும் என் பாடல்களின் சிடிகளை வாங்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். எனது பாடல்களின் அதிகாரப்பூர்வ விற்பனை நிறுவனம் குறித்து விரைவில் அறிவிக்கிறேன். அதுவரை ஐட்யூனிலும் எனது பாடல்கள் எதையும் தரவிறக்கம் (Download) செய்ய வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் இளையராஜா தெரிவித்துள்ளார்.tamil.chennaionline.com ராகதேவன் ரொம்பவும் பிசினெஸ் பேர்வழி ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக