வெள்ளி, 3 அக்டோபர், 2014

வக்கீலின் கன்னத்தில் ஓங்கி அறைந்த மேனகா காந்தி ! தற்போது மறுக்கிறார் ?

 மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சர் மேனகா வக்கீல் ஒருவரை அடித்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் விசாரித்து வருவதாக உயர் அதிகாரி ஒருவர் கூறினார். உ .பி . மாநிலம் பிசால்பூர் ரோட்டை சேர்ந்தவர் வக்கீல் டி.கே வர்மா. இவர் மாவட்ட போலீஸ் அதிகாரியிடம் மனு ஒன்றை கொடுத்துள்ளார். இந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது: பர்கேதா பகுதியில் எனது வீடு உள்ளது. இங்கு பா.ஜ., கட்சியை சேர்ந்த சிலர் வந்தனர். என்னை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி கொண்டு சென்றனர். இங்கு முகாமிட்டிருந்த மேனகா அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். இங்கு மேனகா எனது கன்னத்தில் ஓங்கி அறைந்தார். இந்த அம்மா முன்பு ஒரு முறை விசாரணை கமிஷனின் மேஜை மீதேறி அட்டகாசம் செய்த எமேர்ஜன்சி வரலாறுகள் பல உண்டு . இது ஒரு சொர்ணா அக்காதான்
இதில் நிலைகுலைந்து போனேன். பின்னர் அங்கிருந்து நான் தப்பித்து வந்தேன். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். இது தொடர்பாக அமைச்சரின் சட்ட பிரதிநிதி அஸ்வின் அகர்வால், எஸ்.பி அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார். அமைச்சர் அவ்வாறு நடந்து கொள்ளவில்லை. அவர் தாக்கப்பட்டிருந்தால் யார் முன்பு இந்த சம்பவம் நடந்தது என அவரால் நிரூபிக்க முடியுமா ? இது போன்ற நபரை அமைச்சர் பார்த்ததே இல்லை. இவ்வாறு கூறியுள்ளார். இது குறித்து எஸ்.பி,., கூறுகையில், இது குறித்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளேன். இதில் ஆதாரம் இருப்பின் எப்.ஐ.ஆர்., பதிவு செய்ய அறிவுறுத்தியுள்ளேன் என்றார். dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக