வியாழன், 30 அக்டோபர், 2014

முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா அதிரடி சவால் ! குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யுங்கள்!

இதன் மூலம் ராஜா அவர்கள் மிகவும் தெளிவாக தனது நியாயத்தை முன்வைக்கிறார், ஆனால் ஏன் மீடியாக்கள் இதை இருட்டடிப்பு செய்கிறார்கள்? ஆண்டாண்டு காலமாக கொழுத்த இலாபம் கண்ட செல்போன் கம்பனிகளும் ஜாதி வெறியர்களும் திராவிட கொள்கைகள் மீது தீராத வெறுப்பு கொண்டவர்களும் கைகோர்த்து ராஜாவுக்கும் கனிமொழிக்கும் எதிராக சதிவலை பின்னி அதில் ஓரளவு வெற்றியும் பெற்று விட்டார்கள் . ஆனால் எப்பொழுதும் எல்லோரையும் முட்டாளாக்க முடியாது, உண்மை வெளிப்படும் நேரம் வந்துவிட்டது, பிரமோத் மகாஜன் காலத்தில் இருந்து நடந்து கொண்டு நடைமுறையில் தவறு என்றால் அது தவறு மட்டுமே , அதில் ராஜாவும் கனிமொழியும் எங்கிருந்து வந்தார்கள் . ஆதிக்க ஜாதியின் அப்பட்டமான பொய் காவியம்தான் இந்த ஈஸ்ட்மன் கலர்  டூ ஜி ஸ்பெக்ட்ரம் !
பொய் குற்றச்சாட்டுகள் கோர்டில் நிற்காது. ரெண்டு லட்சம் கோடி அரசுக்கு நஷ்டம் என்று புலம்பியவர்கள், மீண்டும் ஏலம் விடப்பட்டபோது, வெறும் முப்பதாயிரம் கோடிக்கே போனதை கேட்டு, காது அடைத்து போனார்கள். அரசிற்கு எதுவும் நஷ்டம் ஏற்படவில்லை என்று திறமையான மூத்த அமைச்சர் கபில் சிபல் அடித்து சொன்னார். அதை யாரும் காது கொடுத்து கேட்கவில்லை. குற்றம் சாட்டப்பட்டவர்களின் குரல்வளை நசுக்கப்பட்டது. தவறான வதந்திகள் கட்டுகடங்காமல் பரவியது. கண் மூக்கு வைத்து கண்டபடி பேசினார்கள். இதற்கெல்லாம் இப்போது விடிவு வந்து, மூவரும் தடைகளை உடைத்தெறிந்து, குற்றமற்றவர்கள் என்று நிருபிக்கபடுவார்கள். பணக்காரர்களிடம் மட்டுமே புழங்கிய செல்போனை ராஜா தான் குப்பனுக்கும் சுப்பனுக்கும் கிடைக்கும்படி வழி வகுத்து தொழிற் புரட்சி செய்தார். இதற்கு அவருக்கு பாரத் ரத்னா கொடுத்திருக்க வேண்டும். அதைவிட்டு, திஹார் ஜெயிலில் போட்டு வாட்டினார்கள். பிஜேபி காரர்கள் செய்த அலும்புதனதிற்கு, அவர்கள் சபைக்கு வர வேண்டும் என்பதற்காக காங்கிரஸ்ம் தரம் கெட்டு நடந்தது. உலகிலேயே இந்தியாவில் தான் செல்போன் பிளான் கம்மி என்று உலக இந்தியர்களுக்கு தெரியும். இது எப்படி சாத்தியமாயிற்று? ராஜாவின் தொழிற்புரட்சி. தமிழனின் திறமை. பிளானை கம்மியாக கொடுக்க வேண்டுமெனில், கம்பெனிகளும் கம்மியான விலைக்கு அலைவரிசைகளை எடுத்தால் தான் முடியும். அதனால் தான் ராஜா நீக்கு போக்காக நடந்தார். இன்று மோடி அதைதான் செய்கிறார். ஆனால் அது தொழிற் வளர்ச்சிக்காக என்று சொல்கிறவர்கள், அன்று ராஜாவின் செயலிற்கு புது அர்த்தம் கற்பித்தார்கள். டீசலுக்கு மானியம் கொடுத்தால் அரசிற்கு நஷ்டம் தான் ஏற்படும். அதுபோன்று குப்பனும் சுப்பனும் செல்போனை பயன்படுத்த வேண்டுமெனில், அரசிற்கு கொஞ்சம் நஷ்டம் தான் ஏற்படும். மானியம் நம் நாட்டிற்கு தேவை. தலித் என்பதாலும், தமிழன் என்பதாலே, உயரிய பதவியில் இருக்ககூடாது என்பதற்காக , ராஜா பலிவாங்கபட்டார் என்பதே உண்மை.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக