திங்கள், 27 அக்டோபர், 2014

அக்கா ஏன் யாரையும் காதலிக்கல ? காஜலின் தங்கை நிஷா கோபம் ?

சென்னை: நடிகை காஜல் அகர்வால் யாரையும் காதலிக்கவில்லை என கோபப்பட்டார் அவரது தங்கை நிஷா.தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துள்ளார் காஜல் அகர்வாலின் தங்கை நிஷா அகர்வால். அக்காவைபோல் நிஷாவால் சினிமாவில் வெற்றி பெற முடியவில்லை. ஒன்றிரண்டு படங்களோடு நடிப்பைவிட்டு விலகி பாய்பிரண்ட் கரண் வலேச்சாவை மணந்து வாழ்க்கையில் செட்டிலானார். சமீபத்தில் காஜல் அகர்வால் பற்றி காதல் கிசுகிசுக்கள் வெளிவந்தன. தொழில் அதிபர் ஒருவருடன் அவர் டேட்டிங் செய்கிறார் என்று பரபரப்பாக படங்களுடன் தகவல் வெளியானது. இதையறிந்து நிஷா கோபம் அடைந்தார். அவர் கூறும்போது,‘தொழில் அதிபரை காஜல் காதலிக்கிறார் என்பதா? அப்படி எதுவும் இல்லை. யாருடனாவது காஜல் டேட்டிங் செய்தால் அதுபற்றி அவரே தெரிவிப்பார் என்றார். சமீபத்தில் மும்பையில் காஜல், நிஷா குடும்பத்தினருடன் இணைந்து தீபாவளி கொண்டாடினர். இணைந்திருந்த மகிழ்ச்சியின் தருணத்தை புகைப்படமாக தனது இணைய தள பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார் காஜல். - .tamilmurasu.org

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக